இதுதான் டர்னிங் பாயின்ட்.. பாக் அணியை வீழ்த்த காரணமே அவர் எடுத்த அந்த விக்கெட் தான் – இர்பான் பதான் கருத்து

Irfan Pathan and Shivam Dube
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணியானது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது. குறிப்பாக நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணியானது ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் முக்கிய ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை மீண்டும் எதிர்கொண்டது.

இந்திய வெற்றிபெற முக்கிய தருணம் இதுதான் : இர்பான் பதான்

இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. லீக் போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு மற்றொரு முறை சூப்பர் போர் சுற்றிலும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கியமான தருணம் எது? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சில விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 2-ஆவது விக்கெட்டின் போது மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தது. அந்த நேரத்தில் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த ஃபர்கான் மற்றும் சயிம் ஆயுப் ஆகியோரது ஜோடியை ஷிவம் துபே தான் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் உடைத்தார்.

- Advertisement -

அந்த விக்கெட்டை கைப்பற்றவில்லை எனில் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் இன்னும் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கும். அதேபோன்று அவர்கள் முதல் பாதியில் மிகச் சிறப்பாக இருந்ததால் இரண்டாவது பாதியில் 200 ரன்களை தொட்டிருக்க கூட வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் ஷிவம் துபே அந்த நேரத்தில் மற்றொரு விக்கெட்டை எடுத்தார்.

இதையும் படிங்க : பச்சை சட்டை பாத்தாலே விக்கெட் எடுப்பாரு போல.. ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய – அசத்தல் சாதனை

இப்படி அவர் எடுத்த அந்த விக்கெட்டுகள் தான் இந்த போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோன்று கேப்டன் சூரியகுமார் யாதவும் ஷிவம் துபேவை விடாமல் தொடர்ச்சியாக பந்துவீச வாய்ப்பளித்து பயன்படுத்தியதும் பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த உதவியதாக இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement