இது இந்தியாவின் சப்போர்ட் அம்பயரின் அநியாயம்.. பாகிஸ்தான் விமர்சனத்தை நேரலையில் உடைத்த சாஸ்திரி

Zaman Out
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 171/5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் ஃபகர் ஜாமான் 10 ரன்னில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் எட்ஜ் கொடுத்தார். அதை சாம்சன் தரையோடு தரையாக சிறப்பாக பிடித்ததால் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார்.

- Advertisement -

விமர்சித்த பாகிஸ்தான்:

இருப்பினும் பந்து மைதானத்தில் பட்ட பின்பே சாம்சன் பிடித்தார் என்று கருதிய ஜமான் அந்த கேட்சை மறுபரிசீலனை செய்யுமாறு நடுவரிடம் கேட்டுக்கொண்டார். அதை 3வது நடுவர் சோதித்த போது முதல் பார்க்கையில் பந்து சாம்சன் கைக்கு முன் தரையில் படுவது போல் தெரிந்தது. இருப்பினும் 2வது சோதனையில் பந்து சாம்சனின் நுனி விரல்களில் பட்டு பவுன்ஸாகி அவருடைய கைகளுக்குள் தஞ்சமடைவது தெளிவாக தெரிந்தது.

அதனால் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த அதே தீர்ப்பை மீண்டும் 3வது நடுவர் பேர் வழங்கினார். இருப்பினும் பந்து தரையில் பட்டதாக கருதிய ஜமான் மிகுந்த ஏமாற்றத்துடன் தலையை அசைத்துக் கொண்டே பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். அதே போல சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் அம்பயர்கள் ஜமானுக்கு எதிராக அநியாயத் தீர்ப்பை வழங்கியதாக விமர்சித்தனர்.

- Advertisement -

உடைத்த சாஸ்திரி:

அது பற்றி நேரலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வகார் யூனிஸ். “அந்த பந்து சாம்சன் கையில் நன்றாக பிடிக்கப் பட்டதா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. சாம்சன் கையுறைக்குள் பந்து செல்வதற்கு முன் தரையில் பவுன்ஸ் ஆனது போல் தெரிகிறது. அதனாலேயே ஜமான் மிகுந்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றத்துடன் தலையை அசைத்துக் கொண்டே செல்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 171 ரன்ஸ்.. குறைத்து மதிப்பிட்ட பாக் வீரரை ஜெட் வேகத்தில் அவுட்டாக்கிய சூரியகுமார்.. இந்தியா வெல்லுமா?

அதற்கு “களத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதற்கு தெளிவான முடிவு கிடைக்க வேண்டும். ஆனால் அங்கே 3வது நடுவர் பந்துக்கு அடியில் சாம்சன் விரல்கள் இருப்பதாக சொல்கிறார்” என்று கூறினார். அதாவது சாம்சனின் விரல்களில் பந்து பவுன்ஸ் ஆனதை 3வது நடுவர் ரிப்ளையில் பார்த்ததாலேயே அவுட் வழங்கியதாக ரவி சாஸ்திரி உண்மையை உடைத்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement