அது அவரோட விருப்பம் அவரு பண்ணாரு.. சூரியகுமார் யாதவுக்கு ஆதரவாக நின்ற சவுரவ் கங்குலி – விவரம் இதோ

Ganguly and SKY
- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் போட்டியானது கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெகு எளிதாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் :

சூர்யகுமார் யாதவ் எடுத்தது அவருடைய முடிவு : சவுரவ் கங்குலி கருத்து

20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெகு எளிதாக அவர்களை வீழ்த்தியிருந்தது.

- Advertisement -

அந்த போட்டியின் போது டாஸ் போடப்பட்ட பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவிடம் கை குலுக்கவில்லை. அதேபோன்று போட்டி முடிந்த பிறகு வழக்கமாக இரு அணி வீரர்களும் மைதானத்தில் கை குலுக்குவது வழக்கம். ஆனால் அன்றைய போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் யாரும் மைதானத்திற்கு வரவில்லை. அதேபோன்று இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் கதவுகளும் போட்டி முடிந்த உடனே மூடப்பட்டன.

அதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் அணியினர் இதுகுறித்து இந்திய அணியின் மீது குற்றச்சாட்டுகளையும் ஐ.சி.சி-யிடம் முன்வைத்தனர். இப்படி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காமல் போனது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியிடம் ஒரு பிரத்தேக சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த சவுரவ் கங்குலி கூறியதாவது : போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டபடி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. ஆனால் கை குலுக்குவதை பொறுத்த வரை அது இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் தனிப்பட்ட விருப்பம். அவர் அந்த முடிவை எடுத்துள்ளார் அதில் ஒன்றும் தவறில்லை என சூரியகுமார் யாதவுக்கு ஆதரவாக கங்குலி பேசியுள்ளார்.

இதையும் படிங்க : இந்த அவார்டு எனக்கு வேணாம்.. எனக்கு ஹெல்ப் பண்ண அவருக்கு குடுங்க – பெரிய மனதை காட்டிய பாண்டியா

மேலும் தற்போதைய இந்திய அணி மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது என்றும் டி20 போட்டியை பொருத்தவரை அன்றைய நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி சென்று சேரும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement