கடவுளே வரவர நானும் ரோஹித் மாதிரி மாறிக்கிட்டு வரேனே.. டாஸில் கலகலத்த சூர்யகுமாரை கலாய்த்த சாஸ்திரி

Suryakumar Yadav
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக முதல் போட்டியிலேயே அமீரகத்தை வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் தங்களது கடைசிப் போட்டிக்கு முன்பாகவே இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அந்த சூழ்நிலையில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே வெளியேறிய ஓமன் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பதாக கேப்டன் சூரியகுமார் அறிவித்தார்.

- Advertisement -

ரோஹித் போல:

அதே போல வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மாற்றத்தை திடீரென மறந்து போன சூரியகுமார் தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறினார். அப்போது “கடவுளே நான் ரோஹித் சர்மா போல் மாறிக் கொண்டிருக்கிறேனே” என்று சொல்லி சூரியகுமார் கலகலத்தார்.

அதாவது இந்திய அணியின் மற்றொரு கேப்டன் ரோஹித் சர்மா அடிக்கடி சிறுசிறு விஷயங்களை மறந்து விடுவார் என்று 2017இல் விராட் கோலி தெரிவித்திருந்தார். அதை 2023இல் நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் பேட்டிங் செய்வதா? பந்து வீசுவதா? என்பதை மறந்து விட்டு தடுமாறினார். சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் தடுமாறிய அவரைப் பார்த்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் சிரித்ததை மறக்க முடியாது.

- Advertisement -

கலக்கலத்த சூரியகுமார்:

அந்த வகையில் ரோஹித் சர்மா இந்திய அணியில் மிகவும் அதிக மறதியைக் கொண்ட வீரராக திகழ்கிறார். அதே தாமும் மாறிக் கொண்டிருப்பதாக சூரியகுமார் தெரிவித்தது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இதுவரை இத்தொடரில் முதலில் பேட்டிங் செய்யாததால் எங்களுடைய பேட்டிங்கின் ஆழத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம். சூப்பர் 4 சுற்றுக்கு செல்வதற்கு முன் போட்டி நேரம் முக்கியம்”

இதையும் படிங்க: 2 வீரர்களுக்கு ஓய்வு.. ஓமன் அணிக்கெதிரான போட்டியில் 2 மாற்றங்கள் – டாசுக்கு பிறகு சூரியகுமார் அறிவிப்பு

“எங்கள் அணியில் 2 மாற்றங்கள். ஹர்ஷித் வருகிறார். மற்றொருவரும் வருகிறார். (மறதியால் மற்றொரு வீரர் பெயர் தெரியாமல் தவிக்கிறார்) கடவுளே நானும் ரோஹித் போல மாறிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். அப்போது அருகே இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் பிட்ச்சை சோதித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத்தான் நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று சூரியகுமாரிடம் கேட்டு ரவி சாஸ்திரி கலாய்த்தார். அதற்கு இன்னொருவரின் பெயர் விரைவில் தெரியும் என்று சொல்லி விட்டு சூரியகுமார் சிரித்துக்கொண்டே சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement