2 வீரர்களுக்கு ஓய்வு.. ஓமன் அணிக்கெதிரான போட்டியில் 2 மாற்றங்கள் – டாசுக்கு பிறகு சூரியகுமார் அறிவிப்பு

SKY Toss
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது லீக் சுற்று போட்டிகளில் தங்களது கடைசி ஆட்டத்தில் இன்று செப்டம்பர் 19-ஆம் தேதி ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :

அதன்படி அபுதாபி மைதானத்தில் சற்று முன்னர் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்த போட்டி லீக் சுற்று ஆட்டத்தின் கடைசி போட்டி என்பதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்பார்த்தபடியே டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஏற்கனவே கூறப்பட்டது போல வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு அவருடன் சேர்த்து தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கும் இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கு பதிலாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இல்லை.

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவில்லை என்பதால் தங்களது பலத்தை பரிசோதிக்கவே முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்ததாகவும் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார். ஓமன் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வெ.இ அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதிசெய்த ஜுரேல் – என்ன நடந்தது?

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) ஹர்ஷித் ராணா, 10) அர்ஷ்தீப் சிங், 11) குல்தீப் யாதவ்.

Advertisement