சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை ருசித்தது. அதன்பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஓமன் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :
இதன் காரணமாக இந்திய அணியின் சூப்பர் போர் சுற்றுக்கான வாய்ப்பும் உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை எதிர்த்து நாளை செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபி நகரில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த கடைசி லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு இந்த போட்டியில் ஓய்வளித்து சூப்பர் ஃபோர் சுற்றின் போது மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம் என்கிற திட்டமும் இருக்கிறது.
இதன் காரணமாக ஓமன் அணிக்கு எதிரான போட்டியின் போது நிச்சயம் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது. அப்படி பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் வேளையில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
அதனை தவிர்த்து கடைசி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழாது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : பும்ராவை 6 சிக்ஸர் அடிப்பார்ன்னு உசுப்பேத்தி ஹாட்ரிக் டக் அவுட்டான பாக் வீரர்.. 2 மோசமான சாதனை
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் யாதவ், 11) வருண் சக்ரவர்த்தி.



