சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக 30 வயதில் அறிமுகமாகி இருந்தாலும் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தால் இன்று இந்திய அணியின் கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் உயர்ந்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலிக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் அசத்தல் சாதனை :
மேலும் இனிவரும் போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காமல் இந்திய அணி நிச்சயம் ஆசிய கோப்பையை கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சூரியகுமார் யாதவ் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இதுவரை இந்திய அணிக்காக 85 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 166 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2652 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான விராட் கோலிக்கு அடுத்து மிக முக்கியமான ஒரு சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது துவக்க வீரராக இல்லாமல் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி 3637 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து டேவிட் மில்லர், ஷாகிப் அல் ஹசன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் முறையை 2567, 2542, 2535 ஆகிய ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
தற்போது இந்த பட்டியலில் ஐந்தாவது வீரராக சூரியகுமார் யாதவ் 2517 ரன்களுடன் இருக்கிறார். மேலும் 50 ரன்களை அவர் ஆசிய கோப்பை தொடரில் அடிக்கும் பட்சத்தில் மேக்ஸ்வெல், சாகிப் அல் ஹசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை கடந்து துவக்க வீரராக இல்லாமல் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை சூரியகுமார் யாதவ் பிடிப்பார்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் – 3 இந்திய வீரர்கள்
இந்திய அணி சார்பாக துவக்க வீரராக இல்லாமல் 3637 ரன்களை விராட் கோலி குவித்திருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து துவக்க வீரராக இல்லாமல் சர்வதேச டி20 போட்டிகளில் 2500 ரன்கள் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



