முடிஞ்சா பாக் வீரர் நம்பர் ஒன்னு நிரூப்பிச்சு காட்டட்டும்.. இந்தியாவை நெருங்கக் கூட முடியாது.. கங்குலி பேட்டி

Sourav Ganguly
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறுகிறது. அப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சல்மான் ஆகா தலைமையிலான இளம் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க தயாராக உள்ளது.

சொல்லப்போனால் இம்முறை சுழலுக்கு சாதகமான துபாய் மைதானத்தில் இந்தியாவை தோற்கடித்த தங்களிடம் 5 ஸ்பின்னர்கள் இருப்பதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஹெசன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். குறிப்பாக சமீபத்திய முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தாபை வெற்றி பெற வைத்த முகமது நவாஸ் உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னராக திகழ்வதாகவும் ஹெசன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

நிரூப்பிச்சு காட்டுங்க:

எனவே தங்களுடைய ஸ்பின்னர்கள் இந்தியாவை தோற்கடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகமது நவாஸ் நம்பர் ஒன் ஸ்பின்னர் என்பதை இந்தியாவுக்கு எதிராக நிரூபித்துக் காட்டலாம் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தற்போதைய பாகிஸ்தான் அணியால் திறமை அடிப்படையில் இந்தியாவை நெருங்கக் கூட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்கான காரணம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி பேசியது பின்வருமாறு. “சரி. அப்படியானால் அந்த ஸ்பின்னரை இம்முறை தன்னுடைய பயிற்சியாளர் மூளையை இழக்கவில்லை என்பதை நிரூபித்து காட்ட விடுங்கள். பாகிஸ்தான் அணியில் தரம் மோசமடைந்தது. வாசிம் அக்ரம், வகார் யோனிஸ், சோயப் அக்தர், சயீத் அன்வர், இன்சமாம், முகமத் யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் உலகத் தரமான கிரிக்கெட்டர்கள்”

- Advertisement -

கங்குலி கருத்து:

“தற்போது பாகிஸ்தானுக்காக யார் விளையாடுகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஷாஹீன் அப்ரிடியும் வாசிம் அக்ரமும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. எனவே இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே திறமையின் அடிப்படையில் எந்த ஒப்பீடும் கிடையாது. முகமது ரிஸ்வான், பாபர் அசாம் அங்கே இல்லை. பகார் ஜமான் நல்ல வீரராக இருக்கிறார்”

இதையும் படிங்க: 281 ரன்ஸ்.. ஆஸி அணிக்கு எதிரான முதல் ஒன்டேவில் இந்திய மகளிரணி அசத்தல்.. 2வது அதிகபட்ச ஸ்கோர்

“ஷாஹின் அப்ரிடி – ஹரிஷ் ரவூப் ஆகியோர் திறமை அடிப்படையில் அக்ரம் – யூனிஸ் போல இல்லை. களத்தில் நடைபெறுவது எஞ்சிய பாதி விளையாட்டு. அது வித்தியாசமானது” என்று கூறினார். இதற்கிடையே எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என்ற குரலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement