பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆதிக்கம் செலுத்தப்போகும் 2 இந்திய பவுலர்கள் இவர்கள் தான் – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மிக முக்கியமான லீக் போட்டியானது இன்று செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிராக அசத்தப்போகும் 2 இந்திய வீரர்கள் : ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இந்த ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது ஏற்கனவே முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த போட்டியில் பாகிஸ்தான அணியையும் வீழ்த்தி தங்களது வெற்றி நடையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன்னதாக இந்த போட்டியில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்வரும் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அசத்தப்போகும் இரண்டு பந்துவீச்சாளர்கள் குறித்த தனது கருத்தினை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை பொறுத்தவரை இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இருவருமே இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாகவே பாகிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருகிறது.

இதையும் படிங்க : பயிற்சியின் போது காயமடைந்த கில்.. பாக் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? – விவரம் இதோ

இதன் காரணமாக இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் வீசப்போகும் 8 ஓவர்கள் திருப்புமுனையாக அமையும் என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அணியில் ஃபகார் சமான் மற்றும் முகமது ஹாரிஸ் ஆகிய இருவரையும் வீழ்த்தி விட்டால் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பி விடும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement