ஒரே மேட்ச் தான்.. ரிங்கு சிங்கின் சோளியை முடித்த ஷிவம் துபே.. பாவம் பா அந்த தம்பி – விவரம் இதோ

Dube and Rinku
- Advertisement -

துபாயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் அசத்தலாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை அசத்தலாக துவங்கியுள்ளது. நடப்பு சாம்பியனாக இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணியானது ஐக்கிய அரபு அணியை 57 ரன்களுக்கு சுருட்டியது.

ரிங்கு சிங்கின் கதையை முடித்த ஷிவம் துபே :

பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -

ஆனாலும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்டிக் பாண்டியாவும், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷிவம் துபேவும் அவருக்கு கைகொடுத்து வெற்றிக்கு பங்காற்றி இருந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் பந்துவீசிய ஷிவம் துபே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 2 ஓவர்கள் வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இப்படி பகுதிநேர ஆல்ரவுண்டராக இருக்கும் ஷிவம் துபே பந்துவீச்சில் சிறப்பாக கை கொடுத்துள்ளதால் இனியும் அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் விளையாட வாய்ப்பே இல்லை என்றும் தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் ரிங்கு சிங் இந்திய அணியில் பினிஷராக மட்டுமே இடம்பிடித்து வருகிறார். ஆனால் ஷிவம் துபேவை பொருத்தவரை பேட்டிங்கில் அதிரடி காட்டும் வேளையில் பந்துவீச்சிலும் இதுபோன்று கைகொடுக்க முடியும். இதன் காரணமாக தற்போது ஷிவம் துபேவின் பந்துவீச்சின் மீது நிர்வாகம் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவு என்ன? – விவரம் இதோ

அதனால் தொடர்ந்து அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இனிவரும் போட்டிகளிலும் ஷிவம் துபே தொடர்ந்து ஒரு சில ஓவர்கள் பந்து வீசுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்து வரும் வேளையில் தற்போது கூடுதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷிவம் துபேவையும் மாற்ற நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

Advertisement