இந்தியா பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவு என்ன? – விவரம் இதோ

IND vs PAK
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முக்கியமான இரண்டாவது லீக் போட்டியில் நேற்று சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலாக இந்த தொடரினை துவங்கியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? : உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசல் அதிகமாக இருக்கும் வேளையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சட்ட மாணவர்கள் சார்பில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறக்கூடாது என ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டதாவது : இது ஒரு போட்டி மட்டுமே ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டி நடைபெற இருக்கும் வேளையில் இப்போது என்ன செய்ய முடியும்? தொடர்ந்து போட்டி திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று கூறி சட்ட மாணவர்களின் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பி.சி.சி.ஐ சார்பில் வெளியான அறிக்கையில் பொதுவான நாடுகளில் நடைபெறும் ஐ.சி.சி சார்பான போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளைடாடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறியிருந்தது.

இதையும் படிங்க : எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டனாக – சூரியகுமார் யாதவ் புதிய சாதனை

ஏற்கனவே பல்வேறு முன்னாள் இந்திய வீரர்களும் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் விளையாடக்கூடாது என்று கூறிவரும் வேளையில் இந்த போட்டி திட்டிமிட்டபடி நடைபெறும் என்று உறுதியாகி உள்ளதால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement