அவரை மாதிரி ஒரு பிளேயரை பிளேயிங் லெவன்ல இருந்து எப்படி தூக்க முடியும் – சுனில் கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar
- Advertisement -

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியானது நேற்று துபாய் சென்றடைந்தது. எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் தயாராகி வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களே பெரும்பாலும் அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்பார்கள் என்பதனால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

அவரை மாதிரி திறமையான வீரரை தவிர்க்க முடியாது : சுனில் கவாஸ்கர்

சூரியகுமார் யாதவ் தலைமையில் இடம்பெற்றுள்ள இந்த 15 வீரர்களில் இருந்து பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பதே பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் திறமையான பலவீரர்கள் இடம் பெற்றுள்ளதுள்ளால் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோடு வெளியில் இருக்கும் வீரர்களும் மிகச் சிறப்பான வீரர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனாலும் இதில் ஒரு சில வீரர்களுக்கு தவிர்க்க முடியாமல் வாய்ப்பை வழங்க வேண்டிய நிலை நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பல தொடர்களாகவே இந்திய அணியின் துவக்க வீரராக மிகச் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் நிச்சயம் விளையாட வேண்டும் என்ற ஆதரவு குவிந்து வருகிறது.

ஏனெனில் சுப்மன் கில் வருகையால் துவக்க வீரருக்கான இடத்தை இழக்கும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனிலிருந்தும் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் அவர் இருக்கும் பார்மில் நிச்சயம் அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைத்தாக வேண்டும் என்று அவருக்கு ஆதரவுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் : சஞ்சீவ் சாம்சன் போன்ற ஒரு வீரரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க முடியாது என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கினாலும் சஞ்சு சாம்சனுக்கு நிர்வாகம் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும். ஒருவேளை அவருக்கு பினிஷர் ரோலை வழங்க நினைத்தால் பின்வரிசையிலும் விளையாட வைக்கலாம். ஏனெனில் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு திறமையான வீரரை அணிக்குள் எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக வேறு வீரரை விளையாட வைப்பது நியாயமானதாக இருக்காது.

இதையும் படிங்க : ரோஹித் எப்பேர்பட்ட கேப்டன் தெரியுமா? 2 ஓவரில் 35 ரன்ஸ் கொடுத்தும் தாங்க சொன்னாரு.. ராகுல் சஹர் பேட்டி

இந்த விடயம் உண்மையிலேயே இந்திய அணிக்கு ஒரு ஆரோக்கியமான தலைவலி தான் இருந்தாலும் இதை சரியாக கையாள வேண்டும். சஞ்சு சம்சனை பொறுத்தவரை டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவருக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement