ரோஹித் எப்பேர்பட்ட கேப்டன் தெரியுமா? 2 ஓவரில் 35 ரன்ஸ் கொடுத்தும் தாங்க சொன்னாரு.. ராகுல் சஹர் பேட்டி

Rahul Chahar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாக ஹிட்மேன் என்று பாராட்டும் அளவுக்கு சிறப்பாக விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பே 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்த அவர் இந்தியாவின் கேப்டனாகவும் திகழ்கிறார். அவருடைய தலைமையில் 2023 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபி டிராஃபியையும் கேப்டனாக வென்ற ரோஹித் சர்மா பல இளம் வீரர்களுக்கும் ஆதரவளித்துள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மா தாம் தடுமாற்றமாக விளையாடிய போதும் ஆதரவு கொடுத்த கேப்டன் என்று இந்திய வீரர் ராகுல் சஹர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மும்பைக்காக டெல்லிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் தாம் 2 ஓவரில் 35 ரன்கள் வழங்கியதாக சஹர் கூறியுள்ளார்.

- Advertisement -

வீரர்களின் கேப்டன்:

அப்போது தலைகுனிந்த தம்மை இன்னிங்ஸ் முடிவில் மும்பை அணியை தலைமைத் தாங்கி பெவிலியன் நோக்கி அழைத்துச் செல்லுமாறு ரோஹித் சொன்னதாக சஹர் தெரிவித்துள்ளார். அப்பேர்ப்பட்ட ரோஹித் சர்மா பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா பவுலருக்கு வழங்கும் தன்னம்பிக்கையின் அளவு மிகவும் முக்கியம்”

“தன்னுடைய வீரர்களை நம்புவதே ஒரு சிறந்த கேப்டனை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன். என் பந்தில் சிக்சர் அடிக்கப்படும் போது நான் அழுத்தத்தை சந்திக்கிறேன் என்று கேப்டன் உணர்ந்தால் அவர் என்னிடம் வந்து தோள் மேலே கை போட்டு ஏதேனும் சொல்ல வேண்டும். அது போன்ற கடினமான சூழ்நிலைகளில் கேப்டனாக இருப்பவர் கிரிக்கெட்டை தாண்டி ஏதாவது பேசி பரவாயில்லை என்ற வகையில் சொல்ல வேண்டும்”

- Advertisement -

சஹர் பாராட்டு:

“அந்த வகையில் டெல்லிக்கு எதிரான ஒரு செமி ஃபைனல் போட்டி எனக்கு நினைவிருக்கிறது. அந்தப் போட்டியில் எனக்கு எதிராக 2 ஓவரில் 35 ரன்கள் அடிக்கப்பட்டது. ஆனால் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா என்னிடம் வந்து “நீ அணியைத் தலைமைத் தாங்கு” என்று சொன்னார். அதுவே ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மாவின் வழியாகும்”

இதையும் படிங்க: தோனி இந்தியாவுக்காக டீம் செலக்ட் பண்ணாரே தவிர போதைக்காக அல்ல.. பதானுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

“அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று கூறினார். இதற்கிடையே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார். 2027 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடி சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் அவர் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement