இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். 2010ஆம் ஆண்டு அவருடைய தலைமையில் இந்தியா முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. 2011 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணியின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்ட தோனி சீனியர்களை கழற்றி விட்டார்.
அத்துடன் ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ், ஹர்டிக் பாண்டியா போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பளித்தார். அவர்களை வைத்து இந்தியாவுக்காக 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று தோனி சாதனை படைத்தார். அவருடைய ஆதரவைப் பெற்ற வீரர்களில் பெரும்பாலானவர்கள் நாளடைவில் இந்திய அணியில் முக்கிய வீரர்களாக உருவெடுத்தனர்.
இந்தியாவுக்காக தோனி:
ஒருவேளை தோனி அந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் போயிருந்தால் பாகிஸ்தான், இலங்கை போல இந்தியாவும் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறியிருக்கும் என்றே சொல்லலாம். ஆனால் அவற்றையெல்லாம் நினைக்காத கம்பீர், சேவாக், ஹர்பஜன் போன்ற முன்னாள் வீரர்கள் தோனியை பலமுறை விமர்சித்துள்ளனர்.
அதன் உச்சமாக தோனி புகைப்பிடிப்பதற்கு எடுபிடி வேலை செய்யும் வீரர்களுக்கே நிறைய ஆதரவளித்தார் என்று இர்பான் பதான் விமர்சித்திருந்தார். 5 வருடங்களுக்கு முன் பதான் பேசிய அந்த வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக காணப்படுகின்றது. இந்நிலையில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே ஒரு கேப்டனால் தொடர்ந்து நீடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
போதைக்காக அல்ல:
அந்த வகையில் தமக்கு நன்றாக தெரிந்த அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களை வைத்து இந்தியாவின் வெற்றிக்காகவே தோனி தேவையான அணியை தேர்ந்தெடுத்தாக அவர் கூறியுள்ளார். மாறாக போதைக்காக தோனி இந்திய அணியை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று தெரிவிக்கும் ஆகாஷ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பொதுவாகவே நீங்கள் உங்களுடைய சிறந்த அணியை தேர்ந்தெடுக்க விரும்புவீர்கள்”
“உங்களுக்கு முன் அழுத்தத்தின் கீழே சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பார்த்தால் நீங்கள் அவர்களை நோக்கி நகர்வது இயற்கையாகும். அது போன்ற வீரர்களையே கேப்டன் அல்லது பயிற்சியாளர் விரும்புவார்கள். அதற்குப் பெயர் சாதகவாதம் கிடையாது. அந்த வீரர்களுடன் கேப்டன் அல்லது பயிற்சியாளர் நிறைய நேரத்தை செலவிட்டு திறமையைத் தெரிந்து வைத்திருப்பார்கள்”
இதையும் படிங்க: சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சனால் வாய்ப்பை இழக்கப்போகும் இளம்வீரர் – விவரம் இதோ
“அதைத் தாண்டி ஒரு அறையில் எத்தனை பேர் உட்கார்ந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. உப்புக்கு மதிப்புள்ள ஒரு வெற்றிகரமான கேப்டன் அந்த காரணிகளால் பாதிக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நாளின் இறுதியில் அவர் வெற்றிக்கான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு விஷயங்கள் ஓடக்கூடிய கேப்டனின் தோளில் வெற்றிக்கான பங்கு அதிகமாக இருக்கும். அதற்காக கேப்டனுடன் அதிக நேரத்தை செலவிடும் வீரர் வித்தியாசமாக நடத்தப்படுவார் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார்.



