சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கருத்தில் கொண்டு நடப்பு 2025 ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற உள்ளன. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழக்கப்போகும் இளம்வீரர் :
இந்த தொடருக்கான சூரியகுமார் யாதவ் தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியில் மீண்டும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவருக்கு பதவி கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரே அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனது துவக்க வீரருக்கான இடத்தை இழப்பார் என்றும் பிளேயிங் லெவனில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
ஆனாலும் சஞ்சு சாம்சன் சமீப காலமாகவே அசத்தலான பார்மில் இருப்பதன் காரணமாக தற்போது அவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இப்படி சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது இடம் காரணமாக இளம் வீரரான திலக் வர்மா அவரது இடத்தை இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாகவே இந்திய டி20 அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திலக் வர்மா எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : என் வாழ்க்கை மாறுனதே அந்த மேட்சுக்கு அப்புறம் தான்.. இந்திய வீரர் ரிங்கு சிங் – நெகிழ்ச்சி பேட்டி
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியே பெரும்பாலும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியாகவும் இருக்கும் என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



