2 ஓவரில் 40 ரன்ஸ் கொடுத்தாலும் இதை செய்யச் சொன்ன.. தோனியின் சிஎஸ்கேவில் விளையாட ஆசை.. சிவம் மாவி

Shivam Mavi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் நிறைய இளம் வீரர்கள் அவருடைய தலைமையில் விளையாடி அனுபவங்களை கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.

அந்த வரிசையில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி வாய்ப்பு கிடைத்தால் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். கொல்கத்தா அணிக்காக 32 போட்டியில் விளையாடிய அவர் 30 விக்கெட்டுகள் எடுத்து ஓரளவு அசத்தினார். அதனால் இந்திய அணிக்காகவும் அறிமுகமான அவர் 6 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

3 ஓவரில் 40 ரன்ஸ்:

அதன் பின் காயத்தைச் சந்தித்த அவர் குணமடைந்து மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். தற்போது குஜராத் அணிக்காக விளையாடும் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல் 3 ஓவரில் 40 ரன்கள் கொடுத்தாலும் அதற்காக பயப்படாமல் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் உதவ முயற்சிக்க வேண்டும் என்று தோனி அறிவுறுத்தியதாக சிவம் கூறியுள்ளார்.

அது போன்ற அணுகுமுறை கொண்ட தோனி தலைமையில் விளையாடினால் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாட விரும்பும் ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஏனெனில் மஹி பாய் எப்போதும் பவுலவர்களின் கேப்டன் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்”

- Advertisement -

தோனியின் அட்வைஸ்:

“அவர் நிறைய சுதந்திரத்தைக் கொடுத்து ஃபீல்ட் செட்டிங் செய்து எங்களுடைய வேலையை எளிதாக்குவார். எனவே நீங்கள் எம்மாதிரியான பந்தை வீச விரும்புகிறீர்கள் என்பதை மட்டும் செயல்படுத்தினால் போதும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் 2 – 3 ஓவரில் 40 ரன்கள் வழங்கினாலும் அது பிரச்சனை கிடையாது என்று தோனி எனக்கு ஆலோசனை வழங்குவார்”

இதையும் படிங்க: ஓப்பனிங் தரலனாலும் பரவால்ல.. சாம்சனுக்கு ஆசியக் கோப்பையில் அந்த வாய்ப்பை கொடுங்க.. இர்பான் பதான்

“மாறாக நீங்கள் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 6 – 7 ரன்கள் மட்டும் கொடுத்து ஓரிரு விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய அணிக்காக போட்டியை வென்று கொடுப்பதே முக்கியம் என்று தோனி கூறுவார். ஒவ்வொரு பந்தும் முக்கியம் என்பதால் நீங்கள் அதை சரியாக செயல்படுத்த வேண்டும். ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டால் அது நிறைய அழுத்தத்தை உருவாக்கும் என்று இளைஞர்கள் அதிகப்படியாக சிந்திக்கிறார்கள். ஆனால் நீங்கள் நன்றாகத் தயாராகி ஒவ்வொரு பந்திலும் அழுத்தம் தாமாக குறைந்து விடும்” என்று கூறினார்.

Advertisement