2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வுசெய்த – இர்பான் பதான்

Irfan Pathan
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் : இர்பான் பதான்

கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட 15 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணியானது செப்டம்பர் 4-ஆம் தேதி இந்தியாவிலிருந்து துபாய் சென்றடையும் என்றும் கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் இந்திய அணியானது கோப்பையை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இவ்வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவனை தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான பெஸ்ட் இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் துவக்க வீரர்களாக : அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டு மிடில் ஆர்டரில் சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடுத்து ஆல்ரவுண்டர்களாக ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், ரிங்கு சிங் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார்.

- Advertisement -

மீதமுள்ள மூன்று இடங்களில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் டிங், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு இடம் அளித்துள்ளார். அந்த வகையில் இர்பான் பதான் தொகுத்து வழங்கிய 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அது தெரியாம பும்ராவை விமர்சிக்க முட்டாள் இல்ல.. ஆனா நாட்டுக்காக இதை செய்யலன்னா எப்படி.. பதான் விளக்கம்

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) சுப்மன் கில், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) ஹார்டிக் பாண்டியா, 8) அக்சர் படேல், 9) வருண் சக்கரவர்த்தி, 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement