எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக அபிஷேக் ஷர்மா விளையாட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருடன் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வியே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே அபிஷேக் சர்மாவுடன் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருவதால் அவர் விளையாடுவதே சரி என்று கருத்துக்கள் இருந்து வருகின்றன.
அபிஷேக் சர்மாவை தவிர்க்க முடியாது :
அதே வேளையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில் மீண்டும் டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் துவக்க வீரராக விளையாடுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இப்படி இரண்டாம் துவக்க வீரருக்கான போட்டி இருந்தாலும் முதன்மை துவக்க வீரராக அபிஷேக் ஷர்மா விளையாடுவார் என்பது உறுதி.
24 வயதான அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார். அதிலிருந்து தற்போது வரை 17 போட்டியில் விளையாடியுள்ள அவர் இரண்டு சதம் மற்றும் 2 அரைசதம் என 33 ரன்கள் சராசரியுடன் 535 ரன்கள் குவித்துள்ளார்.
எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் தவிர்க்க முடியாத வீரராக விளையாடுவதற்கு அவரிடம் உள்ள ஒரு தனித்தன்மையே காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி பேட்டிங்கில் பவர் ஹிட்டராக இருக்கும் அவர் பவர்பிளே ஓவர்களின் போது அதிரடி காட்டுவது மட்டுமின்றி தேவைப்படும்போது பந்துவீச்சிலும் கை கொடுக்கக்கூடிய வீரர்.
சுழற்பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்படும் அவர் தேவைப்படும் போது ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை வீசுவார் என்பதனால் அவரை இந்திய அணியிலிருந்து நீக்கவே முடியாது. ஏற்கனவே இதுகுறித்து பேசியிருந்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரும் :
இதையும் படிங்க : 3.2 நாட்கள்.. ஃபாஸ்ட் பவுலர்ஸ்ன்னா ஏமாளியா? மார்ஷல் , ஹாட்லீக்கு நிகரான பும்ராவை விமர்சித்தவர்களை விளாசிய சந்து
அபிஷேக் ஷர்மா தான் ஆசிய கோப்பை தொடரின் முதல் முதன்மை துவக்க வீரர் என்றும் தேவைப்படும்போது அவரால் பந்துவீச முடியும் என்பதனால் அவரை பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்ற வாய்ப்பு இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.



