3.2 நாட்கள்.. ஃபாஸ்ட் பவுலர்ஸ்ன்னா ஏமாளியா? மார்ஷல் , ஹாட்லீக்கு நிகரான பும்ராவை விமர்சித்தவர்களை விளாசிய சந்து

Balwinder Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று ஆரம்பக் காலங்களில் வர்ணிக்கப்பட்டது. அதையும் தாண்டி கடந்த 7 வருடங்களாக அசத்தி வரும் பும்ரா இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மற்ற பவுலர்கள் தடுமாற்றமாக பவுலிங் செய்தனர். அப்போது அவர்களுக்கும் சேர்த்து முழுமூச்சுடன் பவுலிங் செய்த பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் முதுகில் மேற்கொண்ட அறுவகை சிகிச்சையால் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று ஆரம்பத்திலேயே அறிவித்தார்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா ஏமாளியா:

துரதிஷ்டவசமாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி காணவில்லை. அதனால் முடிந்தால் முழுமையாக விளையாடுங்கள் இல்லையேல் ஓய்வு பெறுங்கள் என்று இந்தியாவைச் சேர்த்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் ஏமாளியா? என்று பும்ராவை விமர்சிப்பவர்களை 1983 உலகக்கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் பல்வீந்தர் சிங் சந்து விளாசியுள்ளார்.

ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஓய்வெடுப்பதைப் பற்றி யாரும் விமர்சிப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த 7 வருடங்களில் எத்தனை பேட்ஸ்மேன்கள் காயம் இல்லாமலேயே விளையாடியுள்ளார்கள்? எத்தனை பேட்ஸ்மேன்கள் அமைதியாக ஓய்வெடுத்தார்கள்? அவர்கள் யாரையும் யாரும் கேள்வி கேட்கவில்லை”

- Advertisement -

சந்து விளாசல்:

“ஆனால் வேகப்பந்து வீச்சாளர் என்று வரும் போது அனைவரும் விமர்சிக்க துள்ளிக்கொண்டு வருகிறார்கள். உண்மை என்னவெனில் வேகபந்துவீச்சு மிகவும் மிருகத்தனமானது. இந்த நம்பர்களை நான் பார்த்து ஆச்சரியமடைகிறேன். அதாவது கடந்த 7 வருடங்களில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒவ்வொரு போட்டிக்கும் இடையே சராசரியாக 3.2 நாட்கள் மட்டுமே ஓய்வு நாட்களை பெற்றுள்ளார். முகமது சிராஜ் 3.5, முகமது ஷமி 3.7 நாட்களை பெற்றுள்ளார்கள்”

இதையும் படிங்க: அந்த 3 இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலிங் செய்வது உண்மையிலேயே கஷ்டம்.. மார்க் வுட் பேட்டி

“பும்ரா, ஷமி காயத்தால் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லீ, மால்கோம் மார்ஷல், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களுடன் பும்ராவை ஒப்பிடுங்கள். அவர்கள் அனைவரும் மென்மையான ஆக்ஷனை கொண்டிருந்ததால் நீண்டக் கேரியரை பெற்றார்கள். ஆனால் காயம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. பும்ரா மெதுவாக ஓடி வந்து வேகத்தை உருவாக்கும் போது அவரது உடலில் எக்ஸ்ட்ரா பாரம் போடப்படுகிறது. அவற்றைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பவர்கள் பும்ராவை போன்ற பவுலர்கள் வெளிப்படுத்தும் திறன், செயல்படுத்துதல், தருணங்களை மகிழ்ச்சியுடன் பாருங்கள்” என்று கூறினார்.

Advertisement