இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மார்க் வுட் அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். தொடர்ச்சியாக 140 – 150 கி.மீ வேகத்தில் பந்துகளை வீசக்கூடிய அவர் பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொள்வதற்கு கடினமான பவுலர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் இந்தியாவைச் சேர்ந்த 3 பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலிங் செய்வது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
முதலாவதாக ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மாவுக்கு எதிராக பவுலிங் செய்வது உண்மையிலேயே கடினம் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் பவுன்சர் மற்றும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ரோஹித் சிக்ஸர்களை அடித்து விடுவார் என்று மார்க் வுட் தெரிவித்துள்ளார். இது பற்றி ஓவர்லேப் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
3 கடினமான இந்திய பேட்ஸ்மேன்கள்:
“என்னுடைய கேரியரின் பல்வேறு பகுதிகளில் ரோகித் சர்மாவை எதிர்கொண்டது கடினமானது என்று சொல்வேன். ஏனெனில் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவரை அவுட்டாக்குவதற்கான வாய்ப்பு இருப்பது போல உங்களுக்குத் தெரியும். ஆனால் ரோஹித் சர்மா தம்முடைய நாளில் அந்த பந்துகளை (சிக்ஸர்களாக) புகைத்து விடுவார். எனவே அது கடினமானது. அதனால் அவருடைய பேட் பெரியதாக, அகலமாக மாறுவது போல நான் கருதுவேன்” என்று கூறினார்.
அடுத்ததாக விராட் கோலியை அவருடைய பலவீனமான அவுட் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் எளிதாக அவுட்டாக்குவது எளிதல்ல என்று மார்க் வுட் தெரிவித்துள்ளார். அதே போல இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் எப்படி அடிப்பார் என்பதை கணிப்பது கடினம் என்றும் மார்க் கூறியுள்ளார். அதனால் அவர்களுக்கு எதிராகவும் பவுலிங் செய்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
மார்க் வுட் பாராட்டு:
“விராட் கோலி நிச்சயமாக நம்ப முடியாத போட்டியாளர். 4, 5வது ஸ்டம்ப் லைனில் இழுத்து அடிக்கும் போது அவரிடம் பலவீனம் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால் நான் அங்கே பவுலிங் செய்த போதெல்லாம் அவர் அதை மிஸ் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனவே அதுவும் கடினமானது. ரிஷப் பண்ட்டுக்கு எதிராக பந்து வீசும் போது அடிப்படையில் நீங்கள் உங்களுடைய உணர்வுகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இந்தியா வேணும்ன்னு அதை மாற்றியதே.. நியூஸிலாந்திடம் தோற்று 2025 ஃபைனல் போகாம வெளியேற காரணம்.. புஜாரா பேட்டி
“ஏனெனில் தன்னுடைய கைகளால் விளையாடும் அவர் கணிக்க முடியாதவர். நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரியான பந்துகளை வீசினால் நல்ல கண்களை கொண்டிருக்கும் அவர் தாம் விரும்பும் இடத்தில் அடிப்பார். எனவே அவரை சமாளிக்க நீங்கள் மெதுவான பந்துகள், உயரமான பவுன்சர்கள் வேகமான யார்க்கர் போன்ற பல்வேறு பந்துகளை கலக்க வேண்டும்” என்று கூறினார்.



