இந்திய கிரிக்கெட் அணி 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று அசத்தியது. ஆனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா பரிதாபமாக வெளியேறியது. அதற்கு நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது முக்கிய காரணமானது.
அந்தத் தொடரில் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த மைதானங்களில் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் அட்டகாசமாக பவுலிங் செய்தனர். அதை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது படுதோல்வியை பரிசளித்தது. அதனால் 2012 முதல் தொடர்ந்து 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வந்த இந்தியாவின் உலக சாதனை முடிவுற்றது.
விமர்சனம் உண்மை தான்:
இந்நிலையில் சமீப காலங்களாகவே இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பதாக எதிரணிகள் விமர்சித்தன. அது முற்றிலும் உண்மை என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற புஜாரா தெரிவித்துள்ளார். அதுவே நியூசிலாந்திடம் தோற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேற வித்திட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “அது இந்திய பேட்டிங் மற்றும் மொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் அது போன்ற பிட்ச்கள் அமைக்கப்படுவதற்கு காரணம். ஏனெனில் அணிகள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியைப் பெற விரும்புகிறார்கள்”
புஜாரா அட்வைஸ்:
“ஆனால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையானது என்று நான் நினைக்கவில்லை. முன்னோக்கிச் செல்லும் போது நீங்கள் அது போன்ற பிட்ச்களை அமைத்தால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதற்கு அதிக அதிர்ஷ்டம் தேவைப்படும் என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது போன்ற நேரங்களில் நீங்கள் உங்களுடைய திறமையை தாண்டி அதிரடியாக 30, 40, 50 ரன்கள் அடிப்பதற்கான நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்”
இதையும் படிங்க: அந்த 2 சாதகம் இல்லன்னா.. ஸ்டோக்ஸ் மாதிரி பண்ட்டை காபாவில் ஜெய்க்க விட்ருக்க மாட்டோம்.. லாங்கர் பேட்டி
“ஆனால் இப்போது நிலைமைகள் மாறுகிறது என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான அணிகள் நல்ல பிட்ச்களில் விளையாடுகிறார்கள். அதனால் இந்தியாவும் அதை தொடரும் என்று நான் நம்புகிறேன். அதற்காக நான் பந்து சொல்லக்கூடாது அல்லது சுழல வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் போட்டிகள் 3 அல்லது மூன்றரை நாட்களுக்குள் முடியக்கூடாது. நாம் நல்ல பிட்ச்சில் விளையாடும் போது போட்டிகள் 4 அல்லது 5வது நாள் வரை செல்லும்” என்று கூறினார்.



