அந்த 2 சாதகம் இல்லன்னா.. ஸ்டோக்ஸ் மாதிரி பண்ட்டை காபாவில் ஜெய்க்க விட்ருக்க மாட்டோம்.. லாங்கர் பேட்டி

Justin Langer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2017 முதல் சிறப்பாக விளையாடும் அவர் தோனியின் இடத்தை நிரப்பி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். சொல்லப்போனால் தோனியை மிஞ்சியுள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள், சிக்ஸர்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சதத்தை அடித்த முதல் ஆசிய கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வெளிப்படுத்திய பல சிறப்பான ஆட்டங்களில் 2021 காபா போட்டியில் அடித்த 89* ரன்கள் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் 329 ரன்களை துரத்திய இந்தியா 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

2 சாதகம் கிடைச்சது:

அதற்கு கில் 91, புஜாரா அரை சதம் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதைப் பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய பண்ட் 89* ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக இருந்த காபாவை உடைத்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் பார்டர் – கவாஸ்கர் வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் நடைபெற்ற 2021 காபா போட்டியில் பிட்ச் ஃபிளாட்டாக இருந்ததைப் பயன்படுத்தி ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததாக அப்போதைய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இல்லையேல் அவரை மடக்கி இந்தியாவை தோற்கடித்திருப்போம் என்று தெரிவிக்கும் லாங்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஸ்டோக்ஸ் போல பண்ட்:

“அது அற்புதமான முயற்சி. ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் ஹெண்டிங்லே மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்திய ஆட்டத்தை எனக்கு நினைவூட்டியது. அன்றைய நாளில் அவர் பயமின்றி விளையாட வந்ததற்காக பாராட்டப்பட வேண்டும். அது நம்ப முடியாத இன்னிங்ஸ். பிரிஸ்பேன் எங்களுக்கு பல வருடங்களாக சாதகமான இடமாக இருந்தது”

இதையும் படிங்க: 2019 உ.கோ செமி ஃபைனலில் தோனி அடிக்காமயே.. எங்களோட சிக்ஸர் வலையில் விழுந்தாரு.. பெர்குசன் ஆச்சர்யம்

“ஆனால் அங்கே நாங்கள் இந்தியாவிடம் சில தொடருக்கு முன்பாக தோற்றோம். ரிஷப் பண்ட் காபாவில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். ஆனால் லாக் டவுன் காரணமாக அந்தப் போட்டி நான்காவது போட்டியாக நடைபெற்றது. அந்த பிட்ச் மிகவும் ஃபிளாட்டாக இருந்தது. அப்போட்டி வருடத்தின் நவம்பர் மாதத்தை விட முற்றிலும் வித்தியாசமான ஜனவரியில் நடைபெற்றது. அதனால் நாங்கள் அந்த 2 சாதகங்களையும் இழந்தோம்” என்று கூறினார்.

Advertisement