276 ரன்ஸ் 9 முறை.. மோசமான தோல்வியை சந்தித்த தெ.ஆ.. ஆனால் ஆஸியை வீழ்த்துவத்தில் உலக சாதனை

South Africa
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியது. அந்த நிலையில் 3வது போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி மெக்காய் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் தென்னாப்பிரிக்காவை அடித்து நொறுக்கி 431/2 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 142, கேப்டன் மார்ஷ் 100, கேமரூன் க்ரீன் 118* ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அபாரம்:

தென் ஆப்பிரிக்காவுக்கு கேசவ் மகாராஜ் மற்றும் சேனுரான் முத்துசாமி தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்காவை சிறப்பாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்து நிலையில் அதிகபட்சமாக தேவால்ட் பிரேவிஸ் 49 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கூப்பர் கோன்லி 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒயிட் வாஸ் தோல்வியை தவிர்த்தது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

வேதனையிலும் உலக சாதனை:

இதற்கு முன் 2023 உலகக் கோப்பையில் கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக 243 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே தென்னாப்பிரிக்காவின் முந்தைய பெரிய தோல்வியாகும். இருப்பினும் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது. இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 15 தொடர்களில் தென்னாப்பிரிக்கா 9வது வெற்றியைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சொதப்பும் சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பை தொடருக்குள் ரெடி ஆகிடுவாரா? – ரசிகர்கள் வேதனை

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக இருதரப்பு தொடர்களை வென்ற அணி என்ற இங்கிலாந்தின் சாதனையை உடைத்துள்ள தென்னாப்பிரிக்கா புதிய உலக சாதனைப் படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. தென்னாப்பிரிக்கா: 9* (15 தொடர்களில்)
2. இங்கிலாந்து: 8 (21 தொடர்களில்)
3. இந்தியா: 6 (14 தொடர்களில்)

Advertisement