சொதப்பும் சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பை தொடருக்குள் ரெடி ஆகிடுவாரா? – ரசிகர்கள் வேதனை

Sanju Samson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக இடம்பெற்றுள்ள சுப்மன் கில் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் விளையாடுவார் என்று பலராலும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஓராண்டாகவே டி20 துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அந்த இடத்தினை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அதோடு அபிஷேக் சர்மாவுடன் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடினால் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழக்கவும் ஒரு அபாயம் உள்ளதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சொதப்பும் சஞ்சு சாம்சன் : ரசிகர்கள் வேதனை

ஏனெனில் பொதுவாகவே டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து பழக்கப்பட்ட சஞ்சு சாம்சன் பின் வரிசையில் பேட்டிங் செய்தது கிடையாது. எனவே சுப்மன் கில் அணிக்குள் வரும் பட்சத்தில் பின் வரிசையில் பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தான் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதனால் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவலின் இருந்து வெளியேறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்து சஞ்சு சாம்சனுக்கு கடந்த ஓராண்டாக தான் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இவ்வேளையில் சுப்மன் கில்லின் வருகை அவரின் இடத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் இந்த சூழலை சமாளிக்கும் விதமாக சஞ்சு சாம்சன் கேரளாவில் நடைபெற்று வரும் கேரளா லீக் தொடரில் ஆறாவது வீரராக களமிறங்க முடிவு செய்தார். இதன்மூலம் பின்வரிசையிலும் தனது திறமை நிரூபித்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பை பெறலாம் என்று நினைத்திருந்தார்.

- Advertisement -

ஆனால் நடைபெற்று வரும் கேரளா லீக் தொடரின் கடந்த போட்டியின் போது ஆறாவது இடத்தில் இறங்கிய அவர் 22 பந்துகளை சந்தித்து வெறும் 13 ரன்களை மட்டுமே அடித்து ரசிகர்களையும், அந்த அணியின் வீரர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தினார். இன்னும் ஆறு ஆட்டங்கள் கேரளா லீக்கில் எஞ்சியிருக்கும் வேளையில் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தனது திறனை நிரூபித்தால் சஞ்சு சாம்சன் நல்ல நம்பிக்கையுடன் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பார்.

இதையும் படிங்க : உடம்பு, மனசு, உயிர் எல்லாமே நாட்டுக்காக தான்.. ஓய்வு பெற்ற புஜாராவை வாழ்த்திய – யுவ்ராஜ் சிங்

ஒருவேளை இந்த கேரளா லீக் தொடர் அவருக்கு மோசமாக அமையும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை இழக்கும் அபாயத்திற்கு சஞ்சு சாம்சன் தள்ளப்படுவார் என்பதனால் அவரது ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement