உடம்பு, மனசு, உயிர் எல்லாமே நாட்டுக்காக தான்.. ஓய்வு பெற்ற புஜாராவை வாழ்த்திய – யுவ்ராஜ் சிங்

Yuvi and Pujara
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம் மற்றும் 35 அரைசதம் என 7195 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று இந்திய அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 51 ரன்களையும், ஐபிஎல் தொடரில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 30 போட்டிகளில் விளையாடிய 390 ரன்களையும் குவித்துள்ளார்.

சத்தீஸ்வர் புஜாராவை வாழ்த்திய : யுவ்ராஜ் சிங்

தற்போது 37 வயதான சத்தீஸ்வர் புஜாரா கடந்த 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் தவித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் முற்றிலுமாக இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட வேளையில் மீண்டும் தனது கம்பேக் வாய்ப்புக்காக காத்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் எப்படியாவது இடம் பிடிப்போம் என்று நினைத்த புஜாராவின் கனவு அப்போது நிறைவேறாமல் போனது. மேலும் இந்திய அணியும் இளம் வீரர்களுடன் தங்களது அடுத்த கட்ட பயணத்தை துவங்கி விட்டது.

இதன் காரணமாக இனியும் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்ற நேர்த்தியை உணர்ந்து கொண்ட சத்தீஸ்வர் புஜாரா இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அவரது இந்த ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், கிரிக்கெட் நிபுணர்கள், விமர்சகர்கள் என பலரது மத்தியிலும் இருந்தும் அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சத்தீஸ்வரர் புஜாரா ஓய்வுக்கு பிறகு அவரது கரியரை பாராட்டி தனது கருத்தினை பதிவிட்டுள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங் குறிப்பிட்டதாவது : ஒரு உண்மையான வீரர் உடம்பாலும், மனதாலும், உயிராலும் தனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : அவரு என்ன தப்பு பண்ணாரு.. இதெல்லாம் நியாயமே இல்ல.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக – சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி

அந்த வகையில் உண்மையாக நாட்டுக்காக முழுமூச்சுடன் விளையாடிய உங்களது கரியர் முடிவுக்கு வந்துள்ளது. உங்களுடைய அடுத்த பக்கத்தை காண விரும்புகிறேன் என யுவ்ராஜ் சிங் அவரது ஓய்வு முடிவை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement