இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2025 ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளது. வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இந்திய சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தியதால் கோபமடைந்த இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜென்ட்ஸ் லீக் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது.
என்ன சாதிக்க போறீங்க:
அப்போது இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட்டில் விளையாடலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதனால் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியினர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகினார்கள். அதே போல தற்போது ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாமல் விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் பாகிஸ்தானுடன் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் இந்திய அணி விளையாடுவதை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்று இந்திய விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் ஆசிய திட்டமிட்டபடி மோத உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் விளையாடி என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
திவாரி விமர்சனம்:
மேலும் இம்முறை இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை ரசிகர்களை போல் தாம் பார்க்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டி நடைபெறப் போகிறது என்பது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் பகல்காமில் அப்பாவி மக்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பாகிஸ்தானுக்கு இம்முறை நாம் தக்க பதிலடி கொடுத்தோம்”
இதையும் படிங்க: 45 பந்தில் 100.. ஃபார்முக்கு வர அவங்க காரணம்.. ஆசிய கோப்பை சான்ஸ் கிடைக்காதுன்னு நினச்சேன்.. ரிங்கு பேட்டி
“ஆனால் சில மாதங்களுக்கு முன் நடந்த அந்த விஷயங்களை தற்போது நாம் மறந்து விட்டோம். இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறப் போகிறது என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. அதனால் இங்கே மனித வாழ்வுக்கு 0 மதிப்பு கொடுக்கப்படுகிறது. பாகிஸ்தானுடன் விளையாடி அவர்கள் (பிசிசிஐ) என்ன சாதிக்க விரும்புகிறார்கள்? விளையாட்டை விட மனித வாழ்வு மதிக்கப்பட வேண்டும். அதனால் அந்தப் போட்டியை நான் பார்ப்பேனா? என்ற கேள்விக்கே இடமில்லை” எனக் கூறினார்.



