எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட மொத்தம் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணி இன்னும் சில தினங்களில் துபாய் நாட்டிற்கு புறப்படும் என்று தெரிகிறது.
கவுதம் கம்பீர் பெரிய தவறு செய்துவிட்டார் : மனோஜ் திவாரி
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதோடு இந்திய அணியின் இந்த அணித்தேர்வு குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி பயிற்சியாளரான கௌதம் கம்பீரை தாக்கி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை இந்த ஆசிய கோப்பை தொடர்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நிச்சயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
கம்பீர் அளித்த பழைய பேட்டியில் எல்லாம் கூறும்போது : ஜெய்ஸ்வால் எந்த சூழ்நிலையிலும் டி20 போட்டிகளில் நேராக இணையும் திறன் கொண்டவர் என்று பேசியிருந்தார். ஆனால் தற்போது அவர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.
அதுமட்டும் இன்றி அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு கே.கே.ஆர் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த கோப்பைகளை வென்றிருந்தார். இப்படி தொடர்ச்சியாக தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். அவரையும் தேர்வு செய்யாமல் கவுதம் கம்பீர் தவறுசெய்து விட்டார்.
இதையும் படிங்க : சுப்மன் கில் ஓப்பனரா வந்தா என்ன? பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க புதிய யுக்தியை கையிலெடுத்த – சஞ்சு சாம்சன்
ஒரு முன்னாள் வீரராக கெளதம் கம்பீர் பேசியது வேறு. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பேசி வருவது வேறு. அவருடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே இந்திய அணியின் தேர்வு அமைந்திருப்பதாக மனோஜ் திவாரி கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



