சுப்மன் கில் ஓப்பனரா வந்தா என்ன? பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க புதிய யுக்தியை கையிலெடுத்த – சஞ்சு சாம்சன்

Sanju Samson
- Advertisement -

2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அந்த இந்திய அணியில் கடந்த ஓராண்டிற்கு பிறகு மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு டி20 போட்டிகளுக்கான புதிய துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது பலரது மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

புதிய யுக்தியை கையிலெடுத்த சஞ்சு சாம்சன் :

டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தியதாலும், ஐபிஎல் தொடரில் அற்புதமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தியதாலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சுப்மன் கில் இந்திய டி20 அணிக்குள் வந்துள்ளதால் முதன்மை துவக்க வீரராக இருக்கும் அபிஷேக் சர்மாவுடன் அவரே துவக்க வீரராக களமிறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அபிஷேக் ஷர்மாவுடன் துவக்க வீரராக சுப்மன் கில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து கழட்டி விடப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த சில தொடர்களாகவே துவக்க வீரராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் தற்போது சுப்மன் கில்லின் வருகையால் தன்னுடைய இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். டாப் ஆர்டரில் மட்டுமே பேட்டிங் செய்து பழக்கப்பட்ட சஞ்சு சாம்சன் பின் வரிசையில் விளையாட மாட்டார் என்பதனால் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா பிளேயிங் லெவனனில் விக்கெட் கீப்பருக்கான வாய்ப்பை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில் வருகையால் தனது இடத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் புதிய யுத்தியை கையில் எடுத்து தான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயார் என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். அதாவது கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்காமல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : பின்னங்கால் வைக்கிற பழக்கமில்லாத விராட்.. 2014இல் வம்பிழுத்த என்னை 4 நாள் பேச விடல.. பர்ன்ஸ் பேட்டி

இதன் மூலம் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரிலும் தான் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய தயார் என்பதை சஞ்சு சாம்சன் சொல்லாமல் சொல்லியுள்ளார். இதனால் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடினாலும் தனக்கு பிரச்சனை இல்லை என்றும் பின் வரிசையில் ஐந்தாவது வீரராக கூட தான் பேட்டிங் செய்ய தயார் என்பதை சஞ்சு சாம்சன் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement