ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள். மேலும் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஏராளமான விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. இருப்பினும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் கில் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த வாய்ப்பில் 754 ரன்களை அடித்த அவர் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் அவரை புதிய டி20 கேப்டனாக வளர்க்க விரும்பும் தேர்வுக்குழுவினர் இப்போதே துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிலையில் சுப்மன் கில் கடந்த 3 ஐபிஎல் தொடரில் 2000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
3 வருடத்தில் 2000 ரன்ஸ்:
மேலும் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருப்பதாகவும் கைஃப் கூறியுள்ளார். எனவே இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள முடிவு சரியானது என்று தெரிவிக்கும் கைஃப் இது குறித்து பேசியது பின்வருமாறு. “ஏன் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்? ஏனெனில் அவரிடம் கேப்டன்ஷிப் பண்புகள் இருக்கிறது”
“இந்திய அணியை இங்கிலாந்தில் சிறப்பாக தலைமைத் தாங்கிய அவர் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவினார். பேட்டிங்கில் போதுமான ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் குஜராத்தை எப்படி தலைமைத் தாங்குகிறார் என்பது குறித்து அந்த அணியின் உடைமாற்றும் அறைக்கு சென்று வீரர்களிடம் பேசியதாக அஜித் அகர்கர் சொன்னார். அந்த கருத்தை ஐபிஎல் தொடரின் போது அவர் கூறினார். குஜராத்தை கில் தலைமைத் தாங்கிய விதம் சிறப்பானது”
கைஃப் ஆதரவு:
“அங்கே அனைவரும் பாராட்டும் வகையில் கில் தலைவராக செயல்பட்டார். அதனால் இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த முடிவு பாராட்டுக்குரியது. ஏனெனில் அவரை நானும் ஐபிஎல் தொடரில் நெருக்கமாகப் பார்த்துள்ளேன். அவருடைய பேட் எப்போதும் நின்றதில்லை. ஐபிஎல் தொடரில் கடந்த 3 வருடங்களில் அவர் 2000 ரன்களை அடித்துள்ளதை உங்களால் பார்க்க முடியும்”
இதையும் படிங்க: இதான் கிளம்ப சரியான நேரம்.. இளைஞர்களுக்கு வழிவிட்டு ரஹானே நெகிழ்ச்சியான அறிவிப்பு.. ரசிகர்கள் பாராட்டு
“ஸ்ட்ரைக் ரேட் 150க்கும் மேல் இருக்கிறது. எனவே அவருடைய விஷயத்தில் தடுமாறக்கூடிய பகுதிகள் எதுவுமில்லை. தேர்வாளர்கள் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை மனதில் வைத்தே அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் கில் 1966 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



