இதான் கிளம்ப சரியான நேரம்.. இளைஞர்களுக்கு வழிவிட்டு ரஹானே நெகிழ்ச்சியான அறிவிப்பு.. ரசிகர்கள் பாராட்டு

Ajinkya Rahane
- Advertisement -

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஜிங்கிய ரஹானே 2011 – 2015 காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான ஃபார்மட்டிலும் விளையாடினார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரியளவில் அசத்தாக அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2016 – 2021 வரை விராட் கோலி தலைமையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலித்ததை மறக்க முடியாது.

அந்தக் காலங்களில் துணை கேப்டனாக செயல்பட்ட ரஹானே மிடில் ஆர்டரில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றினார். 2020/21 ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. அப்போது நாடு திரும்பிய விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே 2வது போட்டியில் சதத்தை அடித்து இந்தியாவை கம்பேக் கொடுக்க வைத்தார்.

- Advertisement -

ரஹானே அறிவிப்பு:

அதனால் எழுச்சி கண்ட இந்தியா இளம் வீரர்களுடன் காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்றது. அதன் பின் தடுமாற்றமாக விளையாடிய ரஹானே இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஆனால் 2023/24 ரஞ்சி கோப்பையை கேப்டனாக வென்று சிஎஸ்கே அணியில் அசத்திய அவர் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் தேர்வாகி அதிகபட்ச ஸ்கோர் அடித்தார்.

இருப்பினும் அதற்கடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமாக விளையாடியதால் ரஹானே மொத்தமாக கழற்றி விடப்பட்டார். ஆனாலும் மனம் தளராத அவர் கம்பேக் கொடுக்கும் நோக்கத்துடன் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டு:

இந்நிலையில் இளம் தலைமுறைக்கு வழிவிட்டு மும்பை அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஹானே அறிவித்துள்ளார். அதே சமயம் புதிதாக வரும் இளம் கேப்டன் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி மும்பையின் வெற்றியில் பங்காற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: கே.எல் ராகுலை கடந்து சாதனை நிகழ்த்தப்போகும் ஹார்டிக் பாண்டியா.. இன்னும் 5 சிக்ஸ் போதும் – விவரம் இதோ

“கேப்டனாக மும்பை அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வென்றது மிகப்பெரிய கௌரவம். அடுத்த உள்ளூர் சீசன் வரவிருக்கும் சூழ்நிலையில், புதிய கேப்டனை வளர்ப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். அதனால் கேப்டன்ஷிப் பதவியில் தொடர வேண்டாம் என்று நான் முடிவெடுத்துள்ளேன். இருப்பினும் ஒரு வீரராக மும்பை அணிக்கு நிறைய கோப்பைகளை வெல்ல உதவ நான் முழு அர்ப்பணிப்புடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Advertisement