என் வாழ்நாளில் இந்தியா – பாக் அந்த தொடரில் மோதுவதை பாக்கனும்.. வேணாம்னு சொல்லாதீங்க.. வாசிம் உருக்கம்

Wasim Akram
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசியக் கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் கேள்வி நிலவுகிறது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக தற்சமயத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுவதாக இருந்தன.

- Advertisement -

விளையாட்டை புறக்கணிக்காதீங்க:

அப்போது இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட்டில் விளையாடலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதன் காரணமாக யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியினர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகினர். அதே போல ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என்று ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அனைவருக்குமே தேசப்பற்று இருக்கிறது என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதற்காக விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தம்முடைய எஞ்சிய வாழ்நாள் முடிவதற்குள் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை பார்க்க விரும்புவதாகவும் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

- Advertisement -

வாசிம் அக்ரம் உருக்கம்:

இது பற்றி அக்ரம் பேசியது பின்வருமாறு. “ஆசியக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டதும் (இந்தியாவில்) எதிர்வினைகள் வந்தன. ஆனால் பாகிஸ்தானில் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். நாங்கள் விளையாடினாலும் இல்லையென்றாலும் நன்றாக இருப்போம். ஆனால் விளையாட்டு கண்டிப்பாக நடக்க வேண்டும். விளையாட்டில் அரசியல் தவிர்க்கப்பட வேண்டும், நான் அரசியல்வாதி கிடையாது”

இதையும் படிங்க: 36 ஆவரேஜ் 165 ஸ்ட்ரைக் ரேட்.. இனிமேலாச்சும் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் சுயநலமா இதை செய்யனும்.. அஸ்வின் ஆதங்கம்

“அவர்கள் அவர்களுடைய நாட்டின் மீது பற்றுடன் இருக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய நாட்டின் மேலே பற்றோடு இருக்கிறோம். அதைத் தாண்டி செல்ல வேண்டாம். உங்களுடைய நாட்டின் வெற்றிகளைப் பற்றி பேசுங்கள். அதுவே பாகிஸ்தானுக்கும் பொருந்தும். அதுவே இந்தியாவுக்கும் பொருந்தும். அதை சொல்வதை விட செய்தல் கடினமானது. என்னுடைய வாழ்நாளில் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடைபெறுவதைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement