நேரலையில் ஜோக்கர் கிண்டல் பண்ணதுக்காக.. சாதிக்காத பீட்டர்சன் என்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.. ராயுடு பேட்டி

Ambati Rayudu 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 3 கோப்பைகளை வென்றார். சிஎஸ்கே அணிக்காகவும் அவர் 2018, 2021, 2023 தொடர்களில் 3 சாம்பியன் பட்டங்களை வென்றார். குறிப்பாக 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற கையுடன் ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அப்போது கோப்பையை வாங்கும் கௌரவத்தை கேப்டன் தோனி அவருக்கும் ஜடேஜாவுக்கும் கொடுத்தார். அதன் காரணமாக ஓய்வு பெற்ற பின்பும் சிஎஸ்கே மற்றும் தோனிக்கு ஆதரவாக பலமுறை ராயுடு பேசியுள்ளார். அந்த சூழ்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை தோற்கடித்த ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதை கோப்பையை வென்றது போல் வெறித்தனமாக கொண்டாடியது.

- Advertisement -

ஜோக்கர் கிண்டல்:

அப்போது சிஎஸ்கே அணியை தோற்கடிப்பதால் மட்டும் கோப்பை கிடைத்து விடாது என்று பெங்களூரு அணியை ராயுடு விமர்சித்தார். அடுத்ததாக 2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அன்றைய நாளில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கொல்கத்தா அணிக்கு ஆதரவளித்தார். ராயுடு ஹைதராபாத் அணிக்கு ஆதரவளித்தார்.

இறுதியில் கொல்கத்தா கோப்பையை வென்ற நிலையில் ஹைதராபாத் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ராயுடு ஹைதராபாத் அணியின் ஜெர்சியை கழற்றி விட்டு நீல நிறத்திலான வர்ணனையாளர் ஜெர்சியை அணிந்து கொண்டார். அப்போது கெவின் பீட்டர்சன் அவரை ஜோக்கர் என்று கிண்டல் செய்தது பின்வருமாறு. “நான் குறைந்தபட்சம் உறுதியாக இருந்தேன்”

- Advertisement -

மன்னிப்பு கேட்ட பீட்டர்சன்:

“அதனால் வர்ணனையாளர் ஜெர்சியை அணிந்தேன். அது எனக்கு சொந்தமானது. ஆனால் முன்பு அணிந்த ஜெர்சியை தற்போது மாற்றிய நீங்கள் ஒரு ஜோக்கர், எப்போதும் ஒரு ஜோக்கர்” என்று சொன்னார். அதற்கு ராயுடு. “நான் 2 அணிகளுக்கும் ஆதரவளித்தேன். நான் நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவளித்தேன்” என்று அவருக்கு பதிலளித்தார்”

அடுத்த நாளே ராயுடுவை ஜோக்கர் என்று பீட்டர்சன் கிண்டலடித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் அதற்காக பீட்டர்சன் தம்மிடம் மன்னிப்பு கேட்டதாக ராயுடு கூறியுள்ளார் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் நாங்கள் அணிகளை தேர்ந்தெடுக்கவில்லை. சென்னை வெப்பமாக இருந்ததால் நான் 2 சட்டையை கொண்டிருந்தேன்”

இதையும் படிங்க: 296 ரன்ஸ்.. ஹெட் பந்து வீச்சில் மேஜிக்.. முதல் ஒன்டேவில் ஆஸிக்கு எதிராக தெ.ஆ சாதனை ஸ்கோர்

“நேரலையில் அவர் எது வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். நாங்களும் அவரைப் பற்றி சில சிலவற்றை சொல்வோம். ஏனெனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி பீட்டர்சன் எதுவும் சாதிக்கவில்லை. நான் தொழில்முறை அலங்காரத்தை பராமரித்தேன். பின்னர் அப்படி பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டார். நாங்கள் அதையெல்லாம் வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டோம். ஆனால் மக்கள் அதை வேறு வழியில் எடுத்துக் கொண்டனர். அது அவரை அதிகம் பாதித்தது, என்னையல்ல” என்று கூறினார்.

Advertisement