ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய கண்டத்தின் டாப் அணிகள் விளையாடுகின்றன. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது.
அதில் எதிரணிகளை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியாவிடம் மற்ற அணிகளைக் காட்டிலும் தரமான வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட அனைத்தும் எதிரணிகளையும் தோற்கடித்து 2025 ஆசிய கோப்பையை வெல்வோம் என்று வங்கதேச வீரர் ஜாகிர் அலி தெரிவித்துள்ளார்.
வங்தேசம் வெல்லும்:
குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வங்கதேசம் தோற்கடித்தது. அதே போல இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் என்ற 2 – 2 (3) கணக்கில் வங்கதேசம் தோற்கடித்தது. அந்த 2 வெற்றிகளிலும் லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணி நன்றாக விளையாடிய நல்ல ஃபார்மில் இருக்கிறது.
எனவே அந்த 2 வெற்றிகளைப் பெறுவதற்கு பின்பற்றிய அதே திட்டத்தை ஆசிய கோப்பையிலும் பயன்படுத்தி எதிரணிகளை தோற்கடித்து வங்கதேசம் வெல்லும் என்று ஜாகிர் அலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இம்முறை நாங்கள் சாம்பியனாவோம் என்ற லட்சியத்துடன் ஆசியக் கோப்பைக்கு விளையாட செல்கிறோம்”
வெற்றிக்கான திட்டம் இருக்கு:
“தனிப்பட்ட முறையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காகவே நான் அங்கே செல்கிறேன் என்று சொல்வேன். எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் அதையே நம்புகிறார்கள். குறிப்பாக தற்சமயத்தில் எங்களுடைய அணியில் இருக்கும் சூழ்நிலையும், அனைத்து வீரர்களும் போடும் முயற்சியும், எங்களால் இம்முறை சாம்பியனாக முடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது”
இதையும் படிங்க: நானா இருந்தா ஆசிய கோப்பையில்.. அவருக்கு பதில் சூர்யவன்சியை விளையாட வைப்பேன்.. ஸ்ரீகாந்த் அதிரடி பேட்டி
“நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பில்லை. நாங்கள் பொதுவாக விளையாடும் எங்களுடைய கிரிக்கெட்டின் பிராண்டை ஆசிய கோப்பையில் அனைத்து எதிரணிகளுக்கு எதிராகவும் விளையாடுவோம். அதனால் எங்களால் நல்ல செயல்பாடுகளைக் கொடுக்க முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் தயாராகி வருகிறோம்” என்று கூறினார். முன்னதாக 2012, 2016, 2018 வருடங்களில் ஆசிய கோப்பை ஃபைனலுக்குச் சென்ற வங்கதேசம் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



