5 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? விளக்கம் கொடுத்த – கேப்டன் கில்

Gill and Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக இந்த தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது வரை நடைபெற்ற முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

கடைசி போட்டியில் பும்ரா விளையாடுவாரா? : சுப்மன் கில் கொடுத்த விளக்கம்

இந்த நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் பும்ரா விளையாடிவிட்டதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் ஜூலை 31-ஆம் தேதி நடைபெற இருக்கும் அந்த கடைசி போட்டியில் பும்ரா பங்கேற்க வேண்டிய கட்டாயம் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணத்தில் பின்தங்கியுள்ள வேளையில் கடைசி போட்டியில் வெற்றால் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியால் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசி போட்டியில் விளையாடியே ஆக வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்து வருவதால் நிச்சயம் பும்ராவின் இருப்பு அவசியம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அடுத்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் சில சுருக்கமான பதில்களை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : அவர் கடைசி போட்டியில் தன்னால் விளையாட முடியும் என்று நினைத்து முழு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் அவர் ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணித்தேர்வில் இருப்பார். அப்படி அவர் விளையாடுகிறேன் என்று கூறினால் அது நிச்சயம் எங்களுக்கு ஒரு மிகச் சிறப்பான விடயம் தான்.

இதையும் படிங்க : உடைந்த காலுடன் தேசத்திற்காக விளையாடிய ரிஷப் பண்டை வாழ்த்திய சஞ்சீவ் கோயங்கா – விவரம் இதோ

ஒருவேளை அவர் கடைசி போட்டியில் விளையாடவில்லை என்றாலும் எங்களிடம் அவரது இடத்தை நிரப்புவதற்கான தகுதியான வீரர்கள் இருப்பதாக சுப்மன் கில் கூறியது குறிப்பிடப்பட்டது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள பும்ரா இந்திய அணி சார்பாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக திகழ்கிறார்.

Advertisement