தாக்கூர் மாதிரி ஃபிட்ஸ், ஃபீஸஸ் பிளேயர் இந்தியாவுக்கு அதை செய்ய மாட்டாரு.. எதுக்கு எடுத்தீங்க.. சித்து கேள்வி

Navjot Sidhu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் நடைபெறும் 4வது போட்டியில் காயமடைந்த நிதிஸ் ரெட்டிக்கு பதிலாக சர்துள் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே முதல் போட்டியில் வாய்ப்பைப் பெற்ற அவர் சிறப்பாக விளையாடவில்லை.

அதன் காரணமாக நீக்கப்பட்ட அவர் வேறு வழியின்றி நித்திஸ் ரெட்டி காயமடைந்ததால் மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் சர்துள் தாக்கூர் போன்ற வீரர்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே அசத்தக்கூடியவர்கள் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். மேலும் தாகூர் மேட்ச் வின்னர் கிடையாது என்பதால் ஏன் அணியில் எடுத்தீர்கள்? என்று சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

ஃபிட்ஸ் அண்ட் ஃபீஸஸ் பிளேயர்:

ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்தது போல தாக்கூரையும் ஃபிட்ஸ் அண்ட் ஃபீஸஸ் கிரிக்கெட்டர் என்று விமர்சிக்கும் சித்து இது பற்றி பேசியது பின்வருமாறு. “8வது இடத்தில் விளையாடி தாக்கூர் சதத்தை அடித்தாலும், அவரைப் போன்ற ஃபிட்ஸ் அண்ட் ஃபீஸஸ் கிரிக்கெட்டர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அசத்துவார்கள்”

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற உங்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேவை. தாக்கூர் போன்றவரை நீங்கள் 8வது பேட்டிங் இடத்தில் விளையாட வைத்தால் அதை நான் சரி என்று ஏற்றுக்கொள்வேன். இத்தனைக்கும் அவரை நீங்கள் அதிகமாக பவுலிங் செய்ய வைப்பதில்லை. இருப்பினும் பேட்டிங் துறையை வலுப்படுத்துவதற்காக அவரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்”

- Advertisement -

சித்து அதிருப்தி:

“அவரைப் போன்ற ஃபிட்ஸ் அண்ட் ஃபீஸஸ் கிரிக்கெட்ர்கள் வெளிநாட்டில் உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதே போல ஜடேஜாவும் பேட்டிங், ஃபீல்டிங் துறையில் அசத்துகிறார். ஆனால் பவுலிங் துறையில் விக்கெட்டுகள். பொதுவாக உங்களுடைய டாப் 7 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காவிட்டால் 8வது இடத்தில் வருபவரும் அசத்தப்போவதில்லை”

இதையும் படிங்க: கடைசியா வராம.. 50 வருஷத்துக்கு மறக்க முடியாத சம்பவத்தை செஞ்சுட்டீங்க.. பண்ட் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர்

“இந்தக் கருத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். ஆனாலும் இந்திய நிர்வாகம் அதற்கு எதிராகவே தேர்வை செய்து வருகிறார்கள். இது போன்ற தேர்வு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. இந்தத் தொடரில் இந்தியா 70% சிறப்பாக விளையாடியும் 2 – 1 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கிறது. அனுபவமின்மையாலே நாம் பின்தங்கியுள்ளோம் என்று நினைக்கிறேன். அனுபவத்தை நீங்கள் மார்க்கெட்டில் வாங்க முடியாது” என்று கூறினார்.

Advertisement