இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் 54 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பாதத்தில் சந்தித்த காயத்தால் நடக்க முடியாமல் வேதனையுடன் வண்டியில் ஏறி சென்றார். அதனால் மேற்கொண்டு விளையாடாமல் அவர் தொடரிலிருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காயத்தையும் தாண்டி நாட்டுக்காக விளையாடிய அவர் அரை சதத்தை அடித்து இந்தியா 350 ரன்கள் தாண்ட உதவினார்.
கடைசியா வராத தில்:
இந்நிலையில் ரிஷப் பண்ட் காயத்தால் 11வது பேட்ஸ்மேனாக வருவார் என்று எதிர்பார்த்ததாக சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது ரிஷப் பண்ட் 8வதாக விளையாட வந்ததாக அவர் பாராட்டியுள்ளார். தாடை உடைந்தும் இந்தியாவுக்காக விளையாடிய அனில் கும்ப்ளே போல நாட்டுக்காக தைரியமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 50 வருடங்கள் வரை மறக்க முடியாத நிகழ்வை அரங்கேற்றியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “கம்பீருடன் பேசிய போது ரிசப் கடைசி பேட்ஸ்மேனாக வருவார் என்று நாம் நினைத்தோம். ஆனால் அடுத்த விக்கெட் விழுந்ததும் அவர் வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்? காயமடைந்தாலும் இந்தப் பையனை நிராகரிக்காதீர்கள். தன்னுடைய காலை நகர்த்த முடியாவிட்டாலும் அற்புதமான கண் ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ள அவர் அதை வைத்தே டாமினேட் செய்தார்”
50 வருடத்துக்கு நின்னு பேசும்:
“அவர் மீண்டும் விளையாட வந்தது இங்கிலாந்துக்கு கவலையைக் கொடுக்கும் அறிகுறியாகும். அனில் கும்ப்ளே தாடை உடைந்தும் விளையாடினார். அது போன்ற விஷயங்களை நீங்கள் செய்யும் போது அது இங்கிருந்து அடுத்த 50 வருடங்களில் நினைவு கொள்ளப்படும். இது ரிஷப் எந்தளவுக்கு இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது”
இதையும் படிங்க: குல்தீப் யாதவின் கரியரே இதனால் காணாமல் போயிடும்.. வருத்தம் தெரிவித்த சிறுவயது கோச் – விவரம் இதோ
“இந்த கதையை நான் என்னுடைய வீட்டுக்கு வைத்துக் கொள்வதற்காக எடுத்துச் செல்வேன். புஜாரா, ரஹானே, போன்ற சீனியர்கள் தற்போதைய அணியில் இல்லை. ஆனாலும் நம்முடைய அணி 750 அவர்களை எதிர்கொண்டுள்ளது என்பது அற்புதமானது. அனுபவம் இல்லாமலேயே நம்முடைய இளம் அணி பொறுமை மற்றும் கட்டுப்பாட்டைக் காண்பிக்கிறது. இது நமது அணியிடம் உள்ள முதிர்ச்சித்தன்மை மற்றும் வெற்றிக்கானப் பசியை காண்பிக்கிறது” என்று கூறினார்.



