சுதர்சனுக்கு பதில் இந்தியா அவரை சேர்க்கனும்.. சுப்மன் கில் இந்த 2 அட்டாக் பண்ணனும்.. அலெஸ்டர் குக் அட்வைஸ்

Alastair Cook
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்தப் போட்டியில் புதிய கேப்டன் சுப்மன் கில்லை மற்ற அனுபவ இந்திய வீரர்கள் சுதந்திரமாக செயல்படவில்லை என்று அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.

அதே போல 4வது நாளில் சுப்மன் கில் பேட்டிங் துறையில் அட்டாக் செய்ய நினைக்கவில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அந்த விஷயத்தில் முன்னேற வேண்டிய சுப்மன் கில் தலைமையில் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்றும் குக் கேட்டுக் கொண்டுள்ளார். அது போக சர்துள் தாக்கூருக்கு பதில் நித்திஷ் ரெட்டி விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

கில் முன்னேறனும்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிவியூ எடுக்கும் போது நிறைய நபர்கள் முடிவை எடுப்பதில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருமே கடைசியில் தவறான முடிவை எடுத்தார்கள். கேப்டன்ஷிப் பற்றி நீங்கள் அனைத்து புத்தகங்களைப் படித்தாலும் களத்தில் அவை அனைத்தையும் உணர முடியாது. அப்படி ரிவ்யூ எடுக்கும் சமயங்களில் சுப்மன் கில் அதிர்ச்சிகரமாக உணர்ந்திருப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது”

“இந்தியாவின் 2வது இன்னிங்ஸில் அனுபவமிக்க கேப்டன் இருந்திருந்தால் 340/5 என்ற நிலையில் இருக்கும் இங்கிலாந்தின் மேலே இன்னும் அழுத்தத்தை போட முயற்சித்திருப்பார். கடைசியில் 370 ரன்கள் மட்டுமே முன்னிலையாகப் பெற்ற அவர்கள் அதை செய்திருந்தால் பவுலிங் துறையில் இன்னும் கொஞ்சம் அட்டாக் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். ஜடேஜா ரஃப் மேலே மெதுவாக பந்தை வீசுவார் என்று நான் நினைத்தேன்”

- Advertisement -

தேவையான மாற்றங்கள்:

“அதை செய்யாத ஜடேஜா இந்தியாவில் விளையாடுவது போல பந்துகளை வீசினார். சுப்மன் கில் இன்னும் சில விஷயங்களை முயற்சித்திருக்க வேண்டும் என்று நான் கருதினேன். குறிப்பாக 7க்கு 2 என்ற ஆஃப் சைட் ஃபீல்ட் வைத்திருக்க வேண்டும் அல்லது பவுன்சர்களை போட்டிருக்க வேண்டும். அடுத்ததாக இந்தியா கருண் நாயர் அல்லது சாய் சுதர்சனை விட்டுவிட்டு நிதிஷ் ரெட்டியை தேர்ந்தெடுக்கலாம்”

இதையும் படிங்க: ரூ600 சம்பளத்துக்கு நடிச்ச நான் இன்று.. இத்தனை கோடிகளை சம்பாதிக்க இதான் காரணம்.. வருண் பேட்டி

“அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்துவார். குல்தீப் யாதவ் எக்ஸ்ட்ரா ஸ்பின்னராக விளையாட வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மினாம் நகரில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement