ரூ600 சம்பளத்துக்கு நடிச்ச நான் இன்று.. இத்தனை கோடிகளை சம்பாதிக்க இதான் காரணம்.. வருண் பேட்டி

Varun Chakravarthy
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். அதனால் தினேஷ் கார்த்திக் பரிந்துரையில் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் 2020, 2021 வருடங்களில் சிறப்பாக பவுலிங் செய்தார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் விரைவிலேயே துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

ஆனால் அந்த வாய்ப்பில் மோசமாக பவுலிங் செய்ததால் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராத அவர் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்லும் அளவுக்கு அற்புதமாக பவுலிங் செய்தார். அதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த வருண் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தினர்.

- Advertisement -

600 ரூபாய் முதல்:

அதனால் கடைசி நேரத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வான வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பவுலிங் செய்து இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். இந்நிலையில் ஆரம்பக் காலங்களில் சினிமாவில் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளத்தில் நடித்ததாக வருண் கூறியுள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

“கல்லூரிப் படிப்பை முடித்த பின் ஒரு கம்பெனியில் ஒன்றரை வருடம் துணை கட்டிடக்கலைஞர் வேலை செய்தேன். அந்த வேலையை 14000 ரூபாய் சம்பளத்திற்கு துவங்கி 18000க்கு விட்டேன். பின்னர் இசையின் மீதான காதலால் ஃகிட்டார் வாசிக்கத் துவங்கினேன். நீங்கள் சில கலைகளை தொடர விரும்பினால் அதன் மீதான அன்பு உள்ளிருந்து வரவேண்டும், மற்றவர்களின் கவனத்தைப் பெற முயற்சித்தால் பலனளிக்காது”

- Advertisement -

12 கோடி சம்பளம்:

“அதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் என்னால் ஃகிட்டார் பயிற்சி செய்ய முடியவில்லை. 6 – 8 மாதங்களுக்குப் பின் அதையும் விட்டுவிட்டு சொந்தமாக கட்டுமான நிறுவனத்தை தொடங்கினேன். அப்போது வந்த வர்தா புயல் சேதத்தை கொடுத்ததால் 24 – 25 வயதில் எனது அனைத்து முதலீடுகளையும் இழந்தேன். அடுத்ததாக என்னுடைய சில நண்பர்கள் சினிமா துறையில் இருந்ததால் அதில் கவனம் செலுத்தத் துவங்கினேன்”

“அப்போது பல்வேறு மைதானங்களில் ஜீவா படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக அறிந்தேன். அங்கே துணை இயக்குனராக சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றது வேலை செய்யவில்லை. அங்கே ஒரு துணை இயக்குனர் என்னிடம் நீங்கள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளீர்களா? என்று கேட்டார். அதற்கு டென்னிஸ் பந்தில் விளையாடியதைப் பற்றி சொன்னேன். அதன் காரணமாக ஜூனியர் நடிகராக நாள் ஒன்றுக்கு ரூபாய் 600 சம்பளத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பயந்தே.. அவரை அடிச்சு சீக்கிரம் சேசிங் பண்ணோம்.. இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் பேட்டி

அப்போது குறுக்கிட்ட அஸ்வின் இன்று உங்களுடைய சம்பளம் எவ்வளவு? என்று கேட்டதற்கு. “300 டாலர்கள் (25652.78 ரூபாய்)” என்று வருண் சக்கரவர்த்தி பதிலளித்தார். ஆரம்ப காலத் தடுமாற்றங்களை தாண்டி வந்த தாம் தற்போது நிறைய வருமானத்தை பெற கிரிக்கெட் காரணமாக இருப்பதாக வருண் கூறினார். கொல்கத்தா அணியில் அவருக்கு 12 கோடிகள் வருட சம்பளமாக கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement