ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பயந்தே.. அவரை அடிச்சு சீக்கிரம் சேசிங் பண்ணோம்.. இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் பேட்டி

Jamie Smith
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் பேட்டிங் துறையில் 5 சதங்கள் அடித்து சாதனை படைத்த இந்தியா சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறியது.

இருப்பினும் 371 என்ற நல்ல இலக்கை நிர்ணயித்ததால் இந்தியா போராடி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்கள். அதைப் பயன்படுத்தி 188 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 65, பென் டக்கெட் 149 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரான்னா பயம்:

ஓலி போப் 8, ஹரி ப்ரூக் 1, பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் ஜோ ரூட் நிதானமாக 53* (84) ஜேமி ஸ்மித் அதிரடியாக 44* (55) ரன்கள் எடுத்து இங்கிலாந்தை எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் அந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 2வது பந்தை எடுத்தால் விரைவாக தங்களை அவுட்டாக்கி கிறிஸ் ஓக்ஸ் போன்ற டெய்ல் எண்டர்களையும் காலி செய்ய வாய்ப்பிருந்ததாக இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் கூறியுள்ளார்.

எனவே அந்த பயத்தில் பழைய பந்திலேயே போட்டியை முடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஜடேஜாவை அதிரடியாக அடித்து வேகமாக சேசிங் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்மித் பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவை அதிரடியாக எதிர்கொள்ளலாம் என்று நினைத்த சமயத்தில் இலக்கு அதிகமாக இல்லை”

- Advertisement -

வேகமான சேசிங்:

“அதே சமயம் பும்ரா 2வது புதிய பந்தில் பவுலிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடிய கிரிக்கெட்டில் எதையும் உங்களால் உறுதியாக சொல்ல முடியாது. எங்களுடைய டெய்ல் எண்டர்களை நாங்கள் நம்புகிறோம். ஆனால் அந்த சமயத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தால் திடீரென 8 விக்கெட்டுகள் இழந்து அழுத்தம் உருவாகி விடும்”

இதையும் படிங்க: இங்கிலாந்தில் பீட்டர்சன் சொன்ன இந்த திட்டங்களை வெச்சு.. இந்தியாவை ஜெய்க்க வைப்பேன்.. குல்தீப் நம்பிக்கை

“புதிய பந்து வரப்போகிறது என்பது எனக்குத் தெரியும். அதை சமாளித்தால் கிறிஸ் ஓக்ஸை விளையாட வைக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். எனவே சில சிக்ஸர்களை அடித்தால் புதிய பந்தை தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று நினைத்தேன். புதிய பந்து ரன்களை கொடுப்பதைப் போல விக்கெட்டுகளையும் கொடுக்கும். எனவே நீங்கள் அவற்றைக் கணக்கிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும்” என்று கூறினார்

Advertisement