இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராத் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் புதிய வீரர்களாக சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
டெஸ்ட் ரிட்டனில் ஏமாற்றம் அளித்த கருண் நாயர் :
அதுமட்டும் இன்றி உள்ளூர் போட்டிகளில் மலை போல் ரன்களை குவித்து தனது வாய்ப்புக்காக காத்திருந்த கருண் நாயருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான கதவு திறந்தது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக விளையாடியிருந்த அவருக்கு 8 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் ஏற்கனவே இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடிய அவர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர். அதன் காரணாமாக அவரது பேட்டிங் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் லீட்ஸ் நகரில் இன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழந்ததும் 6-ஆவது வீரராக பேட்டிங் செய்ய வந்த கருண் நாயர் நிலைத்து நின்று பெரிய ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முதல் இன்னிங்சில் வெறும் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஒல்லி போப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். கருண் நாயரின் இந்த கம்பேக் மிகச்சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவர் டாக் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோனியை தாண்டியது மட்டுமல்ல.. ரோஹித் மற்றும் சேவாக்கை தாண்டி வரலாறு படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 3 வீரர்கள் சதமடித்த வேளையில் சாய் சுதர்சன், கருண் நாயர் மற்றும் பும்ரா ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.



