தோனியை தாண்டியது மட்டுமல்ல.. ரோஹித் மற்றும் சேவாக்கை தாண்டி வரலாறு படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

Pant and Rohit
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் நேற்று ஜூன் 20-ஆம் தேதி துவங்கிய ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்களை குவித்திருந்த வேளையில் தற்போது இரண்டாம் நாள் ஆட்டத்தில் 500 ரன்கள் நோக்கி மிக சிறப்பாக முன்னேறி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு நிகழ்த்த காத்திருக்கும் ரிஷப் பண்ட் :

இந்த போட்டியின் போது இரண்டாம் நாளில் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 178 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது சதத்தை பதிவு செய்து தோனியின் சாதனையை ஏற்கனவே முறியடித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் இந்திய துவக்க வீரரான சேவாக் ஆகியோரது சாதனையையும் முந்துவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட் சிக்ஸ் அடிக்க எப்போதுமே தயங்கியதில்லை.

அந்த வகையில் இதுவரை 76 டெஸ்ட் இன்னிங்ஸிலேயே அவர் விளையாடியிருந்தாலும் 79 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் அவர் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் : ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களாக சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

- Advertisement -

அவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தோனி 78 சிக்ஸர்களுடன் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் அடித்த 6 சிக்ஸர்களின் மூலம் ரிஷப் பண்ட் ஏற்கனவே தோனியின் இந்த சாதனையை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து விட்டார்.

இதையும் படிங்க : 79 சிக்ஸ்.. தோனியின் 2 வாழ்நாள் சாதனைகளை உடைத்த ரிஷப் பண்ட்.. ஜாம்பவான் கீப்பராக 2 வரலாற்று சாதனை

தற்போது 27 வயதான ரிஷப் பண்ட் இன்னும் நீண்ட காலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதனால் எளிதாக ரோகித் சர்மா மற்றும் சேவாக் ஆகியோரை கடப்பது உறுதி. அதுமட்டுமின்றி இந்த தொடரில் இன்னும் 9 இன்னிங்ஸ்கள் எஞ்சியிருக்கும் வேளையில் மேலும் 12 சிக்ஸர்களை அடித்தால் இந்த தொடரிலேயே அவர் வரலாறு நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement