79 சிக்ஸ்.. தோனியின் 2 வாழ்நாள் சாதனைகளை உடைத்த ரிஷப் பண்ட்.. ஜாம்பவான் கீப்பராக 2 வரலாற்று சாதனை

Rishabh Pant
- Advertisement -

லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்தியாவுக்கு 92 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 42 ரன்னில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் மறுபுறம் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தம்முடைய முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்து 101 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் – ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் நாள் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

தோனியை முந்திய பண்ட்:

அதில் கில் கேப்டனாக பொறுப்பேற்ற தன்னுடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மறுபுறம் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து அசத்தினார். இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நெருங்கினார்.

99 ரன்னில் இருந்த போது பயமின்றி சோயப் பஷீருக்கு எதிராக சிக்ஸரை பறக்க விட்ட அவர் தன்னுடைய 7வது சதத்தை பதிவு செய்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் எம்.எஸ். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்ததை முந்தைய சாதனை.

- Advertisement -

ஜாம்பவான் கீப்பர்:

ஆனால் வெறும் 44 போட்டிகளிலேயே 7 சதங்கள் அடித்துள்ள ரிஷப் பண்ட் தம்முடைய குருவான தோனியின் சாதனையை இரு மடங்கு வேகத்தில் உடைத்துள்ளார். இது போக 76 இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 79 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு சாக்ஸ் போட்டு சிக்கிய சுப்மன் கில்.. ஐசிசி தண்டனைக்கு ஆளாவாரா? 19.45 விதிமுறை சொல்வது இதோ

இதற்கு முன் தோனி 144 இன்னிங்ஸில் 78 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஜாம்பவான் விக்கெட் கீப்பராக தன்னுடைய பெயரை பொன்னெழுத்துகளால் எழுதியுள்ளார் என்றே சொல்லலாம். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கில் 147 ரன்கள் விளாசி அவுட்டானார். அதனால் இப்பதிவிடும் போது இந்தியா 450/5 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement