கருப்பு சாக்ஸ் போட்டு சிக்கிய சுப்மன் கில்.. ஐசிசி தண்டனைக்கு ஆளாவாரா? 19.45 விதிமுறை சொல்வது இதோ

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் அபாரமாக விளையாடி 359/3 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 42 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்து 101 ரன்கள் குவித்தார். அதே போல சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

கருப்பு சாக்ஸ் பிரச்சனை:

முன்னதாக அந்தப் போட்டியில் முதல் நாளில் இந்திய கேப்டன் சுப்மன் கில் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான காலணிகளை அணிந்து விளையாடினார். அவருடைய காலணிகளின் பின்பகுதியில் கருப்பு நிறம் இருந்தது. அதை விட கருப்பு நிறத்திலான காலுறைகளை (சாக்ஸ்) அணிந்து கொண்டு அவர் விளையாடியதால் ஐசிசி தண்டனையைப் பெறுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உடைகள் சம்பந்தமான 19.45 விதிமுறையை மே 2023ஆம் ஆண்டு ஐசிசி புதுப்பித்தது. அதன் படி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெள்ளை, வெள்ளைச் சாந்து அல்லது வெளிர் சாம்பல் ஆகிய 3 வண்ணங்களில் மட்டுமே காலுறைகளை அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது விதிமுறையை மீறிய செயலாக மாறிவிடும்.

- Advertisement -

2 தண்டனை விதிமுறைகள்:

அது போன்ற செயலைத் தான் தற்போது சுப்மன் கில் செய்துள்ளார். அது பற்றி போட்டியின் முடிவில் நடுவர் சுப்மன் கில்லை விசாரணை செய்வார். அவருடைய அறிக்கையின் படி ஐசிசி 2 நடவடிக்கைகள் எடுக்கலாம். ஒன்று 19.45 விதிமுறையை மீறி லெவல் 1 தவறை செய்ததற்காக சுப்மன் கில்லுக்கு 10 அல்லது 20% போட்டி சம்பளத்தை ஐசிசி அபராதமாக விதிக்கும்.

இதையும் படிங்க: 3 பேர் இறங்கி செஞ்சதை பாருங்க.. முட்டாள் மைக்கேல் வாகன் கணிப்பை இந்தியா நொறுக்குவாங்க.. சித்து பதிலடி

ஒருவேளை எதிர்பாராத வகையில் தெரியாதத்தனமாய் சுப்மன் கில்கருப்பு காலுறைகளை அணிந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்புவார். குறிப்பாக அணிவதற்கு வேறு காலுரை இல்லை அல்லது வேறு காலுரை தம்முடைய காலுக்கு பொருத்தமாக இல்லை என்ற காரணங்களுக்காக சுப்மன் கில் கருப்பு காலுரையை அணிந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்புவார். ஆனால் அதற்கு நடுவர் சுப்மன் கில்லை விசாரித்து ஐசிசியிடம் சாதகமான அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement