3 பேர் இறங்கி செஞ்சதை பாருங்க.. முட்டாள் மைக்கேல் வாகன் கணிப்பை இந்தியா நொறுக்குவாங்க.. சித்து பதிலடி

Navjot Sidhu
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் அபாரமாக பேட்டிங் செய்து 359/3 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தைப் பெற்றது.

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சதத்தை அடித்து அசத்தினார்கள். அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான அடித்தளத்தை இந்தியா பெற்றுள்ளது என்றே சொல்லலாம். முன்னதாக விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் இத்தொடரில் இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

- Advertisement -

முட்டாள்தனமான கணிப்பு:

அதனால் இளம் இந்திய அணி சவாலான இங்கிலாந்து மண்ணில் திணறும் என்று பலரும் கணித்தனர். குறிப்பாக கடந்த 100 வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 14 முறை தோல்வியை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். அதனால் இம்முறையும் இங்கிலாந்தில் தோற்பதற்காகவே இந்தியா வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இம்முறையும் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியாவை எளிதாக இங்கிலாந்து தோற்கடிக்கும் என்றும் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். ஆனால் முதல் நாளிலேயே அபாரமாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். இந்நிலையில் மைக்கேல் வாகனுக்கு முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

சித்து பதிலடி:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முட்டாள்கள் தண்ணீர் இல்லாமலேயே வளர்வார்கள். மைக்கேல் வாகன், உங்கள் கணிப்பு எப்போதுமே தவறாக இருந்துள்ளது. உங்களுடைய பவுலிங் அட்டாக்கைப் பாருங்கள். அவர்கள் பாதிரியார்கள் போல இருக்கிறார்கள். எங்களுடைய 3 இந்தியா பேட்ஸ்மேன்கள் உங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்பின்னர்களைப் போல் இறங்கி வந்து அடித்தனர் ”

இதையும் படிங்க: இளம் இந்தியா அடிக்கிறாங்க இப்போ சந்தோசமா? ஸ்டோக்ஸின் பழைய பஞ்சாங்க முடிவை சாடிய மைக்கேல் வாகன்

“பாஸ் இங்கே சத்தங்கள் எதையும் நிரூபிக்கப் போவதில்லை. ஒரு கோழி முட்டையிடும் போது கூட ஒரு சிறிய கோள் உருவாவதைப் போன்ற சத்தம் வரும்” என்று கூறினார். மேலும் 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா 4 – 0 என்ற கணக்கில் தோற்கும் என்று மைக்கேல் வாகன் கணித்திருந்தார். சமீபத்தில் 2025 உலகக்டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்கும் என்றும் அவர் கணித்திருந்தார். அந்த கணிப்புகள் பொய்யானதைப் போல இம்முறையும் மைக்கேல் வாகன் கணிப்பை இளம் இந்திய அணி அடித்து நொறுக்கி பொய்யாக்கும் என்று சித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement