ஐபிஎல்’ல பாத்துருக்கேன்.. சுப்மன் கில் புயல் மாதிரி சொல்றதை செஞ்சு அசத்துவாரு.. கேரி கிர்ஸ்டன் நம்பிக்கை

Garry Kirsten
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அத்தொடரில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏனெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்தவில்லை. அதனால் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்ற சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்படலாமா? என்று முன்னாள் வீரர்கள் விமர்சனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சுப்மன் கில்லை ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் பயிற்சியாளராக இருந்த போது தாம் பார்த்துள்ளதாக கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சொற்படி நடப்பவர்:

கிரிக்கெட்டைப் பற்றிய நல்ல அறிவும் திறமையும் கொண்டுள்ள சுப்மன் கில் சொன்னதைச் செய்யக்கூடியவர் என்று அவர் கூறியுள்ளார். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் சுப்மன் கில் கேப்டனாக புயலைப் போல் செயல்பட்டு இந்தியாவுக்காக அசத்துவார் என்றும் கிர்ஸ்டன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பை வென்ற ஜாம்பவான் பயிற்சியாளராக கிர்ஸ்டன் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“சுப்மன் கில் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். புத்திசாலித்தனமான கிரிக்கெட்டரான அவரிடம் விளையாட்டைப் பற்றிய நல்ல மூளை இருக்கிறது. அவர் தன்னுடைய ஆட்டத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளார். மிகவும் திறமையானவர் என்பதை தாண்டி அவர் நல்ல மனிதர் என்பது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

புயல் மாதிரி அசத்துவாரு:

“இது போன்ற கேப்டன்ஷிப் பொறுப்புக்கு வரும் போது நீங்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டு சோதிக்கப்படுவீர்கள். அது போன்ற சோதனைகளில் தான் உங்களுடைய முன்னேறும் திறன் பாடங்களைக் கற்றுக்கொண்டு வளரும். அந்த வகையில் அவரிடம் நல்ல கேப்டனாக வருவதற்கான அனைத்து திறன்களும் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் சொற்படி நடக்கக் கூடியவர்”

இதையும் படிங்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தை சொந்த ஊரில் தோற்கடிக்கும்.. இதான் ஸ்கோர்.. சச்சின் நம்பிக்கை

“தன்னுடைய பயிற்சி மற்றும் தயாராகும் முறைகளில் அவர் விடாமுயற்சியுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழக் கூடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் புயலாக முன்னேறுவதற்கு முதன்மையானவர் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா விளையாட உள்ளது.

Advertisement