சச்சினை விட கோலிக்கு பவுலிங் செய்ய கஷ்டபட்டேன்.. 4 வருடத்தில் திருப்பி அடிச்சாரு.. ஆண்டர்சன் பேட்டி

James Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்நிலையில் அத்தொடரை முன்னிட்டு இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு எதிராக பவுலிங் செய்த நினைவுகளை இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக தம்மால் ஓரளவு சிறப்பாக பவுலிங் செய்ய முடிந்ததாக அவர் கூறியுள்ளார். அதே போல 2014ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்துக்கு வந்த விராட் கோலியை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளைப் பயன்படுத்தி எளிதாக அவுட் செய்ததாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மாஸ்டர் சச்சினை விட கடினமான:

ஆனால் அதற்காக அசராத விராட் கோலி கடுமையாக பயிற்சிகளை செய்து முன்னேறி 2018 இங்கிலாந்து தொடரில் தம்மிடம் ஒருமுறை கூட அவுட்டாகாமல் திருப்பி அடித்ததாக ஆண்டர்சன் பாராட்டியுள்ளார். அந்த வகையில் சச்சினை விட விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்ய சிரமப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2014இல் முதல் முறையாக விராட் கோலி வந்த போது அவருக்கு எதிராக நான் ஆரம்பத்திலேயே வெற்றியைக் கண்டேன்”

“அவருடைய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பலவீனத்தைப் பயன்படுத்தி சுரண்டினேன். ஆனால் அடுத்த முறை இங்கிலாந்துக்கு வந்த போது அந்தப் பந்துகளில் வேலை செய்து விட்டு வந்திருந்த அவர் முற்றிலும் மாறுபட்ட பிளேயராக விளையாடினார். அவர் தன்னுடைய ஆட்டத்தை முற்றிலும் வித்தியாசமான லெவலுக்கு எடுத்துச் சென்றார்”

- Advertisement -

கிங் விராட் கோலி:

“அதனால் என்னை மட்டுமின்றி பொதுவாக அவர் மற்ற பவுலர்களின் வேலையையும் கடினமாக்கினார். முதல் தொடரில் அவரை 4 – 5 முறை எளிதாக அவுட்டாக்கினேன். ஆனால் அடுத்த முறை விளையாடிய போது அவரை ஒரு முறை கூட என்னால் அவுட்டாக்க முடியவில்லை. சச்சினுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவதில் பற்றாக்குறை ஏற்பட்டது என்று நான் எப்போதும் உணர்ந்ததில்லை”

இதையும் படிங்க: சச்சினை விட விராட் கோலி தான் எனக்கு அந்த சிரமத்தை கொடுத்தவர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து

“இருப்பினும் விராட் கோலிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவதில் கண்டிப்பாக ஒரு பற்றாக்குறை இருந்தது. அவர் பவுலிங் செய்வதற்கு மிகவும் கடினமான பிளேயர் என்று கண்டறிந்தேன். ஏனெனில் இரும்பைப் போன்ற மனநிலையைக் கொண்டிருந்த அவர் மோதிப் பார்க்க விரும்பினார். விராட் கோலி மிகவும் போட்டித்தன்மை மிக்கவர். அவருக்கு எதிராக முதல் தொடரில் பெற்ற வெற்றியைத் தவிர்த்து மற்ற தொடர்களில் பவுலிங் செய்வது கடினமாகவே இருந்தது” எனக் கூறினார்.

Advertisement