102 ரன்ஸ்.. ஃபைனலில் ஐடன் மார்க்ரம் சரித்திர சாதனை.. ஆஸியை வீழ்த்தி கோப்பை வெல்லப் போகும் தெ.ஆ?

Aiden markram 2
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்து ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா அதிகபட்சமாக ரபாடா 5 விக்கட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை அதை விட அற்புதமாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மிரட்டியது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36, டேவிட் பேடிங்கம் 45 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் 6 விக்கெட்டுகள் எடுத்து 74 ரன்கள் முன்னிலைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அபாரம்:

அதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி மிகவும் போராடி 2வது இன்னிங்ஸில் 207 ரன்கள் கொடுத்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 43, மிட்சேல் ஸ்டார்க் 58* ரன்கள் எடுத்து போராடியும் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3, ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

இறுதியில் 282 என்ற கடினமான இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 2 நாட்களில் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்த பிட்ச்சில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் பேட்டிங்கை துவங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரியான் ரிக்கல்ட்டன் 6 ரன்னில் ஸ்டார்க் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

மார்க்ரம் சாதனை:

ஆனால் மறுபுறம் ஐடன் மார்க்கம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த வியான் முல்தர் 27 ரன்னில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் பவுமா மிகவும் பொறுப்புடன் விளையாடி நங்கூரமாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்தார்.

நேரம் செல்ல செல்ல மிகச்சிறப்பாக விளையாடிய மார்க்கம் சதத்தை அடித்து தென்னாபிரிக்காவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். இதன் வாயிலாக ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் சதத்தை அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சரித்திர சாதனையை மார்க்ரம் படைத்துள்ளார். அவரை தவிர்த்து ஏபி டீ வில்லியர்ஸ், ஸ்மித், காலிஸ் உட்பட வேறு எந்த தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேனும் ஐசிசி ஃபைனலில் சதத்தை அடித்ததில்லை.

இதையும் படிங்க: இந்தியா மட்டும் இளிச்சவாயா? 28 விக்கெட்ஸ்.. மௌனமான ஆஸி, இங்கிலாந்தை விளாசிய ஆகாஷ் சோப்ரா

அதனால் 3வது நாள் முடிவில் 213/2 ரன்களை எடுத்துள்ள தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல 90% வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. களத்தில் அரை சதமடித்த பவுமா 65*, மார்க்ரம் 102* ரன்களுடன் உள்ளார்கள்.

Advertisement