இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்துள்ள வேளையில் தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது. அனுபவ வீரர்கள் அல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து தொடரில் அவர் இடம்பெற்றிருக்க வேண்டும் : சவுரவ் கங்குலி
இதன் காரணமாக இந்த தொடர் இந்திய அணிக்கு மிக சவாலான தொடராக மாறியுள்ளது. மேலும் இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இருப்பதால் இந்த தொடர் மிக முக்கியமான தொடராகவும் இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்தாலும் அணித்தேர்வில் உள்ள ஒரு சில குறைகளை முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவரும் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர் விடுவிக்கப்பட வேண்டிய ஒரு வீரர் அல்ல. தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் அழுத்தத்தின் கீழும் அற்புதமாக ரன்களை குவித்திருக்கிறார்.
மேலும் பொறுப்பை ஏற்று விளையாடும் அவர் தன்னிடம் இருந்த குறைகளையும் குறைத்திருக்கிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளை தற்போது நன்றாக விளையாடுகிறார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்படும் அவர் சிகப்பு பந்து போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பும்ரா, சிராஜ் இல்ல.. இங்கிலாந்தில் அந்த அறிமுக இந்திய பவுலர் மேஜிக் செய்வாரு.. மோர்கெல் நம்பிக்கை
கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு கோப்பையை கைப்பற்றி தந்ததோடு இந்த ஆண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.



