24 வருட சச்சினை விட கம்மியா வெய்ட் பண்ண கோலி.. இனிமேல் இதை நிம்மதியா முடிவெடுக்கலாம்.. சேவாக் பேட்டி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2025 கோப்பையை ஒரு வழியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதன் காரணமாக தங்கள் மீதான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை உடைத்த பெங்களூரு அணி தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதியது. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 18 வருடங்கள் காத்திருந்து தம்முடைய முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர் 9000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து முழுமூச்சுடன் வெற்றிக்காக போராடினார். 2013 – 2021 வரை கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 2016 தொடரில் 973 ரன்கள் விளாசி பெங்களூரு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இருந்தும் அவருடைய தலைமையில் பெங்களூரு கோப்பையை வெல்லத் தவறியது.

- Advertisement -

சச்சின் போல கோலி:

அதன் காரணமாக விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு அணி கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதனால் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடியும் ஆர்சிபி தோல்வியைச் சந்தித்தது. அதன் காரணமாக விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்ல பெங்களூரு அணியை விட்டு வேறு அணிக்கு செல்ல வேண்டுமென சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

இருப்பினும் அதற்கெல்லாம் செவி சாய்க்காத விராட் கோலி வைராக்கியத்துடன் விளையாடி ஐபிஎல் கோப்பையை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் 24 வருடங்கள் காத்திருந்து உலகக் கோப்பையை வென்ற சச்சின் டெண்டுல்கரை விட குறைந்த வருடத்தில் ஐபிஎல் கோப்பையை வென்ற விராட் கோலி இனிமேல் நிம்மதியாக ஒய்வு பெறலாம் என்று வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சேவாக் பாராட்டு:

“விராட் கோலி கோப்பையை வெல்ல 12 (17) வருடங்கள் மட்டுமே காத்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் 1989 முதல் 2011 வரை காத்திருந்தார். எனவே கோலியின் காத்திருப்பு குறைவானதே. சச்சின் டெண்டுல்கர் எப்போதும் நம்பிக்கையை இழந்ததில்லை. உலகக் கோப்பை வென்ற பின்பே விடைபெறுவேன் என்று அவர் தன்னுடைய மனதில் முடிவெடுத்தார்”

இதையும் படிங்க: 1.10 கோடி ஃகேர் பண்ட்.. 11 ரசிகர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஆர்சிபி அணி.. வேதனையுடன் அறிவிப்பு

“அதே நிலையில் இருந்த விராட் கோலி தற்போது நிம்மதியாக இருப்பார். இனிமேல் அவரால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை நிறுத்தும் முடிவை எப்போது வேண்டுமானாலும் மகிழ்ச்சியாக எடுக்க முடியும். ஒரு வீரர் கோப்பையை வெல்வதற்காகவே விளையாடுவார். பணம் வந்து செல்லும். ஆனால் கோப்பை வெல்வது எளிதல்ல. தற்போது விராட் கோலியின் காத்திருப்பு முடிந்துள்ளது. இந்த வருடமும் அவர் தன்னுடைய அணிக்காக வலுவானப் பங்கைக் கொடுத்தார்” என்று கூறினார்.

Advertisement