1.10 கோடி ஃகேர் பண்ட்.. 11 ரசிகர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஆர்சிபி அணி.. வேதனையுடன் அறிவிப்பு

RCB Team
- Advertisement -

ஐபிஎல் 2025 கோப்பையை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி முதல் முறையாக சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்திய அந்த அணி முதல் முறையாக கோப்பையை வென்று தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தது. அந்த வரலாற்று வெற்றியை விராட் கோலி தலைமையில் ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினர்.

ஆனால் அந்த கொண்டாட்டம் 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் கோப்பையை வென்ற பெங்களூரு அணி அதை கொண்டாடுவதற்காக தங்களது ஊரில் இருக்கும் எம் சின்னசாமி மைதானத்திற்கு சென்றனர். அங்கே இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

உதவிக்கரம் நீட்டிய பெங்களூரு:

அதைப் பார்ப்பதற்காக மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் தடுமாறினர். அதன் காரணமாக 11 ரசிகர்கள் நெரிசலில் சிக்கி இயற்கை எய்தினர். 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தது அனைவருக்கும் சோகத்தைக் கொடுத்தது.

இந்நிலையில் தங்களுடைய வாழ்வை இழந்த தங்கள் அணியின் 11 ரசிகர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் காயமடைந்த ரசிகர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் “ஆர்சிபி ஃகேர்ஸ் ஃபண்ட்” என்ற நிதியையும் அந்த அணி நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

- Advertisement -

1.10 கோடி உதவி:

அந்த நிதியில் இருந்து காயமடைந்த ரசிகர்களுக்கான மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்று பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைப் பற்றி அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது பின்வருமாறு. “பெங்களூருவில் நேற்று நடந்த துரதிஷ்டவசமான நிகழ்வு ஆர்.சி.பி குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது”

“இந்த சோகமான நேரத்தில் மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக இயற்கை எழுதியவர்களின் 11 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை ஆர்.சி.பி அறிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் காயத்தை சந்தித்த ரசிகர்களை ஆதரிக்கும் நோக்கத்தில் ஆர்.சி.பி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்பட்டு வருகிறது”

இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் 12-யை தேர்வுசெய்து அறிவித்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ

“எங்கள் ரசிகர்கள் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எப்போதும் இதயமாக இருப்பார்கள். நாங்கள் அவர்களுடைய துக்கத்தில் ஒருவராகவும் ஒற்றுமையாக இருப்போம்” என்று வேதனையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசமான நிகழ்வு பற்றி விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற பெங்களூரு அணியின் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement